2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் மகளிர் 66 கிலோ எடை பிரிவில் பங்கேற்ற அல்ஜீரிய வீராங்கனை இமேன் கெலிப் (25 வய்து) அதிரடியாக வெற்றிகளைக் குவித்து தங்கப் பதக்கம் வென்றார். மருத்துவ பரிசோதனையில் இவர் ஆண் தன்மையை குறிக்கும் XY குரோமோசோம்கள் கொண்டவர் என்பது தெரிய வந்ததால், மகளிர் பிரிவு போட்டிகளில் பங்கேற ஏற்கனவே தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் பாரிஸ் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள அனுமதித்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இவரது ஆக்ரோஷமாகன குத்துகளை சமாளிக்க முடியாமல் திணறிய ஒரு வீராங்கனை சில விநாடிகளிலேயே போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்து கண்ணீர் விட்டு கதறி அழுதபடி வெளியேறினார்.
ஆனாலும், ஒலிம்பிக்கில் தொடர்ந்து விளையாடிய இமேன் தங்கப் பதக்கத்தையும் கைப்பற்றினார். இந்த நிலையில், சமீபத்தில் கசிந்துள்ள ஒரு பரிசோதனை அறிக்கையில் அவர் XY குரோமோசோம்கள் கொண்ட உயிரியல் ரீதியான ஆண் தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் உடலின் உள்புறமாக வளர்ந்த விதைப்பைகளையும் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பாரிஸ் ஒலிம்பிக்கில் இமேன் வென்ற தங்கப் பதக்கம் பறிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
The post இமேன் கெலிப் ஆண் தான்! ஒலிம்பிக் பதக்கம் பறிக்கப்படுமா? appeared first on Dinakaran.