லண்டன்: இங்கிலாந்தில் உள்ளூர் கவுன்டி போட்டிகள் நடந்து வருகிறது. இதில் சர்ரே அணிக்காக வங்கதேச ஆல்ரவுண்டர் சாகிப் அல் ஹசன் விளையாடி வருகிறார். இதில் சர்ரே மற்றும் சோமர்சட் இடையிலான போட்டியில் இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து சாகிப் அல் ஹசன் மொத்தம் 63 ஓவர்கள் பந்துவீசினார். இந்நிலையில் சாகிப்பின் பந்துவீச்சு சர்ச்சைக்குரிய வகையில் இருப்பதாக போட்டி நடுவர்கள் ஸ்டீவ் ஓ ஷாக்னசி மற்றும் டேவிச் மில்னஸ் குற்றம் சாட்டியுள்ளனர்.
எனினும் சாகிப் தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க எந்தவித தடையும் விதிக்கப்படவில்லை என்றும், அடுத்த சில வாரங்களில் அவர் சோதனைக்கு உட்படுத்தப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 447 சர்வதேச போட்டிகளில் 712 விக்கெட்டுகளும், 71 டெஸ்டுகளில் 246 விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ள சாகிப், இதுவரை பலமுறை சர்ச்சைகளில் சிக்கியிருந்தாலும் பந்துவீச்சு சர்ச்சையில் சிக்குவது இது முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
The post மீண்டும் சர்ச்சையில் சிக்கிய சாகிப் அல் ஹசன் appeared first on Dinakaran.