கொல்லம் கலெக்டர் அலுவலக குண்டுவெடிப்பு வழக்கு மதுரையைச் சேர்ந்த 3 பேருக்கான தண்டனை நாளை அறிவிப்பு

திருவனந்தபுரம்: கொல்லம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த டிபன் பாக்ஸ் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்ட மதுரையைச் சேர்ந்த 3 பேருக்கான தண்டனை நாளை அறிவிக்கப்படுகிறது. கடந்த 2016ம் ஆண்டு ஜூன் 15ம் தேதி கேரள மாநிலம் கொல்லம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள முன்சிப் நீதிமன்றத்தின் அருகே நிறுத்தப்பட்டிருந்த ஒரு பழைய ஜீப்பில் வைக்கப்பட்டிருந்த டிபன் பாக்ஸ் குண்டு வெடித்து ஒருவர் காயமடைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக என்ஐஏ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது.

இதில் குண்டு வைத்த மதுரையைச் சேர்ந்த அப்பாஸ் அலி, சம்சுல் கரீம் ராஜா, தாவூத் சுலைமான் மற்றும் சம்சுதீன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த கொல்லம் மாவட்ட முதன்மை செஷன்ஸ் நீதிமன்றம், அப்பாஸ் அலி, சம்சுல் கரீம் ராஜா மற்றும் தாவூத் சுலைமான் ஆகியோர் குற்றவாளிகள் என்று நேற்று முன்தினம் உறுதி செய்தது. இவர்களுக்கான தண்டனை 5ம் தேதி (நேற்று) அறிவிக்கப்படும் என்றும் நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் 3 பேருக்கான தண்டனை நாளை (7ம் தேதி) அறிவிக்கப்படும் என்று கொல்லம் நீதிமன்றம் நேற்று தெரிவித்தது.

 

The post கொல்லம் கலெக்டர் அலுவலக குண்டுவெடிப்பு வழக்கு மதுரையைச் சேர்ந்த 3 பேருக்கான தண்டனை நாளை அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: