அமெரிக்கா அதிபர் தேர்தல்: கமலா ஹாரீஸ் வெற்றி பெற வேண்டி குலதெய்வ கோயிலில் சிறப்பு வழிபாடு

வாஷிங்டன்: அமெரிக்கா அதிபர் தேர்தலில் போட்டியிடும் இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் வெற்றிபெற வேண்டி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அவரது குலதெய்வ கோவிலில் வழிபாடு நடைபெற்றது. அமெரிக்கா அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் மற்றும் டிரம்ப் இடையே கடுமையான போட்டி நிலவி வரும் நிலையில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கமலா ஹாரிஸ் வெற்றிபெறவேண்டி வாஷிங்டனில் இருந்து 13 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருவாரூர் மாவட்டம் துளசேந்திரபுரம் தர்ம சாஸ்தா கோவிலில் பூஜைகள் நடைபெற்றன. இதில் அமெரிக்காவில் இருந்து கமலா ஹாரிஸின் ஆதரவாளர்கள் 3 பேர் பங்கேற்று கமலா ஹாரிஸ் வாழ்க என்று முழக்கமிட்டனர். கோவிலில் கமலா ஹாரிஸ் பெயர் ஒரு கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது. அதில் அவரது தாத்தாவின் பெயர் நன்கொடை கொடுத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கோவில் வெளியே கிராமமக்கள் வைத்துள்ள ஒரு பெரிய பேனரில் மண்னின் மகள் தேர்தலில் வெற்றிபெற வாழ்த்துகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னார்குடியை அடுத்த துளசேந்திரபுரம் கிராமத்தை பூர்விகமாக கொண்டவர் கமலா ஹாரிஸ். இவரது தாத்தா கோபாலன் ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்தபோது ஸ்டெனோகிராபராக இருந்தவர். கோபாலனின் 2வது மகள் ஷாமலா அவரது மகள் தான் கமலா ஹாரிஸ் வழக்கறிஞராக பணியாற்றிக்கொண்டே அரசியலில் ஈடுபட்டு வந்த கமலா ஹாரிஸ் கலிபோர்னியாவின் முதல் பெண் உறுப்பினராக பதவி வகித்தார். கடந்த 2019ம் நடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்று அதிபரானால் அமெரிக்காவின் முதல் பெண் அதிபர் என்ற வரலாற்றை படைப்பார்.

The post அமெரிக்கா அதிபர் தேர்தல்: கமலா ஹாரீஸ் வெற்றி பெற வேண்டி குலதெய்வ கோயிலில் சிறப்பு வழிபாடு appeared first on Dinakaran.

Related Stories: