×
Saravana Stores

கைதான ஆட்டோ டிரைவர் சிறையில் அடைப்பு மதுபானம் கொடுத்து மும்பை சிறுமி கூட்டு பலாத்காரம்

* சென்னை வாலிபர்கள் 3 பேர் அதிரடி கைது

* மேலும் ஒருவருக்கு தனிப்படை வலைவீச்சு

புதுச்சேரி : புதுவையில் மாயமான மும்பை சிறுமிக்கு மதுகொடுத்து பலாத்காரம் செய்ததாக கோட்டக்குப்பத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் அச்சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாக எழுந்த புகாரின்பேரில் சென்னையைச் சேர்ந்த 3 பேரை பிடித்து பெரியகடை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரியில் உறவினர் வீட்டுக்கு வந்த மும்பையை சேர்ந்த 16 வயது சிறுமி கடந்த மாதம் 30ம்தேதி மாயமானார். இதுகுறித்து அவருடைய பெற்றோர் பெரியகடை காவல் நிலையத்தில் அன்றிரவே புகார் அளித்தனர். அதன்பேரில் பெரியகடை போலீசார் வழக்குபதிந்து, மாயமான சிறுமியை தேடினர். அப்போது அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து மாயமான சிறுமி ஒரு ஆட்டோவில் ஏறிச்செல்வதை போலீசார் கண்டுபிடித்தனர்.

பின்னர் சம்பந்தப்பட்ட ஆட்டோ நம்பரை கொண்டு டிரைவர் கண்டுபிடித்து விசாரித்தபோது, அவர் புதுச்சேரியை அடுத்த தமிழக பகுதியான கோட்டக்குப்பத்தை சேர்ந்த காஜா மொய்தீன் (32) என்பதும், மாயமான சிறுமியை ஓட்டலுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததோடு, தனது வீட்டுக்கு அழைத்து சென்றதும் தெரியவந்தது. அங்கிருந்த தனது மனைவியிடம் சிறுவன் (கிராப் முடி வைத்திருந்ததால்) என அறிமுகப்படுத்தியதோடு அச்சிறுமிக்கு மது வாங்கிக்கொடுத்து அங்கும் 2 முறை பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

பின்னர் போதையில் இருந்த சிறுமியை, 30ம்தேதி நள்ளிரவே புதுவை நகரப்பகுதியில் உள்ள ஒரு ரெஸ்டாரண்ட் வாசலில் ஆட்டோ டிரைவர் மொய்தீன் இறக்கி விட்டுவிட்டு தலைமறைவானதும் தெரியவரவே, போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிந்து மொய்தீனை கைது செய்தனர்.

பின்னர் அவர் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த 2ம்தேதி இரவு புதுச்சேரி கடற்கரையில் மாயமான அச்சிறுமியை போலீசார் மீட்டு விசாரித்தனர். அப்போது ஆட்டோ டிரைவர் மட்டுமின்றி, அதன்பிறகு மேலும் சிலர் கூட்டு பலாத்கார சம்பவத்தில் ஈடுபட்ட அதிர்ச்சி தகவல் அம்பலமானது. அதாவது சென்னையை சேர்ந்த 4 வாலிபர்கள் நைசாக சிறுமியிடம் பேச்சு கொடுத்து, தனியாக அழைத்துச் சென்று அவருக்கு முதலில் மது வாங்கிக் கொடுத்துள்ளனர்.

பின்னர் கோட்டக்குப்பம் அருகிலுள்ள கடற்கரைக்கு அழைத்து சென்று அங்குள்ள ஓட்டல் அறையில் 31ம்தேதி அடைத்து வைத்து, போதையில் இருந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததும், பின்னர் ஓட்டல் அறையை காலிசெய்துவிட்டு, சிறுமியை சென்னைக்கு அழைத்து சென்றதும் தெரியவந்தது. அதன்பிறகு கடந்த 2ம்தேதி வாடகை கார் (ஓலா) மூலம் சிறுமியை தனியாக புதுவைக்கு அனுப்பி வைத்ததும் முழுமையான விசாரணையில் தெரியவந்தது.

இருப்பினும் சென்னை வாலிபர்கள் குறித்து தனக்கு தெரியாது எனவும், நேரில் பார்த்தால் அடையாளம் காட்ட முடியும் எனவும் அச்சிறுமி போலீசாரிடம் கூறியுள்ளதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து போலீசார், பாதிக்கப்பட்ட சிறுமியை மீட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்துள்ளனார். சிறுமியின் வாக்குமூலம் அடிப்படையில் வாலிபர்களை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்தனர்.

பின்னர் தொடர் விசாரணையில் இறங்கிய தனிப்படை போலீசார், கோட்டக்குப்பம் கடற்கரை பகுதியில் ஓட்டலில் தங்கியிருந்தவர்களின் விவரங்களை சேகரித்தனர். மேலும் சென்னையிலிருந்து புதுவைக்கு வந்த வாடகை கார் எண்ணை கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது வாடகை கார் பதிவு செய்தவர்களின் விவரங்களை கொண்டு, தனிப்படை போலீசார் 3 வாலிபர்களை பிடித்து, புதுவைக்கு அழைத்து வந்து கூட்டு பாலியல் பலாத்காரம் தொடர்பாக சட்டம்- ஒழுங்கு சீனியர் எஸ்பி கலைவாணன் தலைமையிலான போலீஸ் உயர் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருவதாக தெரிகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக ஜிப்மரில் போலீசார் அனுமதித்துள்ளனர். புதுவையில் மும்பை சிறுமியை கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post கைதான ஆட்டோ டிரைவர் சிறையில் அடைப்பு மதுபானம் கொடுத்து மும்பை சிறுமி கூட்டு பலாத்காரம் appeared first on Dinakaran.

Tags : Kotakuppat ,Boxo ,Puduwa ,
× RELATED பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அதிமுக நிர்வாகி போக்சோவில் கைது