×

கஞ்சா விற்ற 5 பேர் கைது

திருச்சி, நவ.5:திருச்சியில் மாநகரில் கஞ்சா விற்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர். திருச்சி, ராம்ஜி நகர், மில் காலனி, மாரியம்மன் கோயில் தெரு அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக எடமலைப்பட்டி புதுார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் அங்கு சோதனை மேற்கொண்டனர். இதில் அதே பகுதியைச் சேர்ந்த மதன் மித்ரன் (36) மற்றும் ஜானகிராமன் (46) ஆகிய இருவர் கஞ்சா விற்றது தெரியவந்தது. மேலும் ஜானகிராமன் கஞ்சா விற்பனை சரித்திரபதிவேடு குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது. இருவரையும் எ.புதுார் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து ரூ.12 ஆயிரத்து 500 மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல் கேகேநகர், எல்ஐசி காலனி அருகே கஞ்சா விற்ற அதே பகுதியைச் சேர்ந்த உமேஷ் (29) என்பவரை கேகேநகர் போலீசார் கைது செய்தனர். பாலக்கரை எடத்தெரு அருகே கஞ்சா விற்ற வரகனேரியைச் சேர்ந்த மதன்குமார் (19) என்பவரையும் காந்தி மார்க்கெட் போலீசார் கைது செய்தனர். தென்னுார், நீர்தேக்கத்தொட்டி அருகே கஞ்சா விற்ற தென்னூர், கண்ணதாசன் சாலையைச் சேர்ந்த கார்த்திகேயன் (27) என்பவரை தில்லைநகர் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

The post கஞ்சா விற்ற 5 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Trichy ,Edamalaipatti Pudhar Police ,Mariamman Koil Street ,Mill Colony ,Ramji Nagar, Trichy ,Dinakaran ,
× RELATED ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில்...