இந்த வழக்கை விசாரித்த மதுரை போக்சோ நீதிமன்றம், ராஜமோகனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதை எதிர்த்து ராஜமோகன், ஐகோர்ட் மதுரை கிளையில் அப்பீல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கில் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் சிறுமி முரண்பாடான வாக்குமூலம் கொடுத்துள்ளார். சிறுமியின் தாயாரின் 2வது கணவரை மனுதாரர் தாக்கியதால், இவர்களுக்குள் முன்விரோதம் இருந்ததை மறைத்துள்ளனர்.
போதுமான மருத்துவ ஆதாரமும் இல்லை. இதன் மூலம் மனுதாரர் மீதான புகாரில் உண்மையில்லை என்பது தெரிய வருகிறது. சிறுமியின் தாயார் மற்றும் அவரது 2வது கணவர் இடையிலான தவறான நட்பை மறைக்க மனுதாரர் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ளது. குழந்தை பொய் பேசாது என்ற இயல்புக்கு எதிராக, சிறுமியும் உள்நோக்கம் தெரியாமல் மனுதாரர் மீது குற்றம் சுமத்தியுள்ளார். விசாரணை அதிகாரி நியாயமாக விசாரணை நடத்தாமல் போலியான ஆவணங்களை தயாரித்துள்ளார்.
இதனால் மனுதாரர் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்படுகிறார். இந்த வழக்கில் பொய் புகார் அளிக்கப்பட்டதற்காக சிறுமியின் தாயார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் மதுரை போலீஸ் கமிஷனர் வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மனுதாரருக்கு பாதிக்கப்பட்டோர் இழப்பீட்டு நிதியிலிருந்து மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். இந்த வழக்கில் கீழமை நீதிமன்றம் சிறுமிக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது. பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டு தொகையை திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.
The post பாலியல் தொல்லை என பொய் புகார் தண்டனை பெற்றவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு: சிறுமியின் தாய் மீது போக்சோ வழக்கு பதிய உத்தரவு appeared first on Dinakaran.