- பண்டைக்கால்
- ராஜராஜ சோழர்
- சதய
- தஞ்சாவூர்
- சதய விழா
- ஐபசி சதய
- ஐபசி சதய நட்சத்திரம்
- ராஜராஜ சோழனின் சதய விழாவுக்கான பந்தக்கால்
தஞ்சாவூர்: தஞ்சையை ஆண்ட மாமன்னன் ராஜராஜ சோழனின் சதய விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. ராஜராஜ சோழன் பிறந்த ஐப்பசி சதய நாளன்று சதய விழா கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு ஐப்பசி சதய நட்சத்திரம் வரும் 10ம் தேதி வருவதால் 1,039வது சதய விழா நவ. 9 மற்றும் 10ம் தேதிகளில் நடைபெற உள்ளது. தஞ்சை பெரிய கோயில் வளாகத்தில் விழாவுக்கான பந்தக்கால் நடும் விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி கோயில் வளாகத்தில் சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் பந்தக்கால் நடப்பட்டது.
பந்தக்காலுக்கு பால், மஞ்சள் உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. 10ம் தேதி காலை தேவாரநூலுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி, ஓதுவார்களின் வீதியுலா நடைபெறுகிறது. பின்னர் பெரிய கோயிலுக்கு அருகே உள்ள மாமன்னன் ராஜராஜசோழனின் சிலைக்கு கோயில் நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. அன்று இரவு ராஜராஜ சோழன் மற்றும் உலோகமாதேவிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வீதியுலா நடைபெற உள்ளது. சதயவிழா 2ம் ஆண்டாக இந்தாண்டும் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது.
The post தஞ்சையில் ராஜராஜ சோழனின் சதய விழாவுக்கு பந்தக்கால் appeared first on Dinakaran.