- நாகை
- நாகப்பட்டினம்
- வேளாங்கண்ணி பேராலயம்
- கோடியக்கரை பறவைகள் சரணாலயம்
- நாகூர் தர்கா
- எதுக்குடி முருகன் கோவில்
- சிக்கல் சிங்காரவேலவர்
- சோழ
- தின மலர்
நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம், என்றால் சுற்றுலா தலங்கள் நிறைந்த பகுதியாகும். வேளாங்கண்ணி பேரலாயம், கோடியக்கரை பறவைகள் சரணாலயம், நாகூர் தர்கா, எட்டுக்குடி முருகன் கோயில், சிக்கல் சிங்காரவேலவர் என அனைத்து தரப்பினரும் வந்து செல்லும் மாவட்டமாகும். இதைப்போல் சோழர் காலம் தொட்டு புகழ் பெற்ற இயற்கையாக அமைந்த துறைமுகம். இந்தியாவில் மீன் ஏற்றுமதி, உப்பு ஏற்றுமதியில் நாகப்பட்டினம் முன்னிலையில் உள்ளது.
இவ்வாறு பல்வேறு புகழ் வாய்ந்த நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் 16ம் தேதி இலங்கை காங்கேசன் துறைக்கு கப்பல் சேவை தொடங்கி வைக்கப்பட்டது. இதனால் இந்தியா-இலங்கை ஆகிய இரண்டு நாடுகள் இடையே நல்லுறவை ஏற்படுத்த முடியும் வேண்டும் என்பதற்காக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 14ம் தேதி ‘செரியாபாணி’ என்ற பெயர் கொண்ட பயணிகள் கப்பல் இயக்கப்பட்டது.
இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்துக்கு இரண்டு நாட்டு பயணிகள் இடையே நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால் வடகிழக்கு பருவ மழையை காரணம் காட்டி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23ம் தேதியுடன் பயணிகள் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதில் ஆரம்பிக்கப்பட்டு ஒரு சில நாட்களை கப்பல் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது, இரண்டு நாட்டு பயணிகள் இடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு மீண்டும் ‘சிவகங்கை’ என்ற பெயர் கொண்ட கப்பல் கடந்த ஆகஸ்ட் மாதம் 16ம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. வாரத்தில் செவ்வாய், வியாழன், சனி, ஞாயிறு ஆகிய 4 நாட்கள் இயக்கப்படுகிறது. இந்த கப்பல் சேவை சுற்றுலா பயணிகள் இடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் நாகப்பட்டினத்தில் விமான நிலையம் அமைத்து விமான சேவையை தொடங்க வேண்டும் என சுற்றுலா பயணிகள், வர்த்தகர்கள் வலியுறுத்துகின்றனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அல்லது திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டியில் விமான நிலையம் அமைத்து இலங்கை போன்ற அண்டை நாடுகளுக்கு விமான சேவை தொடங்க திட்டமிடப்பட்டது. ஆனால், தஞ்சாவூரில் விமான நிலையம் அமைந்துள்ளதால் அதை விரிவுப்படுத்தி, அங்கிருந்து விமான சேவையை தொடங்க முயற்சி எடுக்கப்பட்டது. இதனால் நாகப்பட்டினத்தில் விமான நிலையம் அமைக்கும் முயற்சி கைவிடப்பட்டது. அதே நேரத்தில் நாகப்பட்டினம் இயற்கை பேரிடர் நிறைந்த மாவட்டம் என்பதால் விமான நிலையம் அமைத்தால் பாதிப்புகள் ஏற்படும் என்பதால் இந்த திட்டம் முற்றிலுமாக கைவிடப்பட்டது.
ஆனால், இன்றைய காலத்தில் அதிக அளவில் அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. எனவே அறிவியல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே விமான நிலையம் அமைக்க ஒன்றிய அரசு முன்வர வேண்டும். அவ்வாறு அமைத்தால் நாகப்பட்டினத்தில் இருந்து மீன் மற்றும் அதை சார்ந்த பொருட்கள் மற்றும் உப்பு போன்றவை அதிக அளவில் ஏற்றுமதி செய்ய முடியும். எனவே நாகப்பட்டினத்தில் விமான நிலையம் அமைத்து விமான சேவையை தொடங்க வேண்டும் என்பது மீனவர்கள், உப்பு உற்பத்தியாளர்கள், சுற்றுலா பயணிகளின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.
The post கைவிடப்பட்ட திட்டம் மீண்டும் புத்துயிர் பெறுமா? மீன், உப்பு ஏற்றுமதி அதிகரிக்க நாகையில் ஏர்போர்ட் அமையுமா? மீனவர்கள், வர்த்தகர்கள் எதிர்ப்பார்ப்பு appeared first on Dinakaran.