தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் 2 நாட்களில் ரூ.439 கோடிக்கு மது விற்பனை: கடந்த ஆண்டைவிட ரூ.29 கோடி குறைவு

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் வழக்கமான விடுமுறை நாட்களில் சுமார் ரூ.150 கோடிக்கு மது விற்பனை நடைபெறும். ஆனால் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் விற்பனை அதிகளவில் இருக்கும். கடந்த 2023ம் ஆண்டு தீபாவளியின்போது 2 நாட்களில் ரூ.467.69 கோடிக்கு மது விற்பனையானது. இதைவிட, இந்த ஆண்டு (2024) டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், கடந்த ஆண்டைவிட சுமார் ரூ.29 கோடி குறைவாக, அதாவது ரூ.439 கோடிக்கு மட்டுமே மது விற்பனையாகி உள்ளது. அதன்படி, நேற்று முன்தினம் மற்றும் நேற்று ஆகிய இரண்டு நாட்கள் மண்டல வாரியாக மது விற்பனை விவரம் வருமாறு: சென்னையில் 30ம் தேதி ரூ.47.16 கோடிக்கும், 31ம் தேதி தீபாவளி அன்று ரூ.54.18 கோடிக்கும் மது விற்பனையாகி உள்ளது. அதேபோன்று மதுரையில் 30ம் தேதி ரூ.40.88 கோடி, 31ம் தேதி ரூ.47.73 கோடிக்கும், திருச்சியில் 30ம் தேதி ரூ.39.81 கோடி, 31ம் தேதி ரூ.46.51 கோடிக்கும், சேலத்தில் 30ம் தேதி ரூ.38.34 கோடி, 31ம் தேதி ரூ.45.18 கோடி, கோவை 30ம் தேதி ரூ.36.40 கோடி, 31ம் தேதி ரூ.42.34 கோடிக்கும் மது விற்பனையாகி உள்ளது.

அதன்படி, தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த 30ம் தேதி ரூ.202.59 கோடிக்கும், தீபாவளி நாளான 31ம் தேதி ரூ.235.94 கோடி என மொத்தம் ரூ.438.53 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. இது கடந்த ஆண்டைவிட ரூ.29.10 கோடி குறைவாகும். கடந்த ஆண்டு (2023) தீபாவளி பண்டிகையையொட்டி அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ.101.04 கோடிக்கு மது விற்பனையாகி இருந்தது. ஆனால் இந்த ஆண்டு மதுரையைவிட சென்னை மண்டலத்தில் அதிகபட்சமாக ரூ.101.34 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் 2 நாட்களில் ரூ.439 கோடிக்கு மது விற்பனை: கடந்த ஆண்டைவிட ரூ.29 கோடி குறைவு appeared first on Dinakaran.

Related Stories: