×
Saravana Stores

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நாளை ஒட்டி ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து!

டெல்லி: மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நாளை ஒட்டி ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார். கடந்த 1956-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி ஆந்திர பிரதேசம், மத்திய பிரதேசம், கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு மற்றும் லட்சத்தீவுகள் ஆகியவை மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்பட்டன. பஞ்சாப் மற்றும் அரியானா 1966-ல் பிரிக்கப்பட்டது.

சத்தீஸ்கார் 2000-வது ஆண்டில் மத்திய பிரதேசத்திலிருந்து பிரிக்கப்பட்டது. இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்கள், தங்களது மாநிலம் வேறு மாநிலத்தில் இருந்து பிரிந்த தினத்தை, அவர்களது மாநில தினமாக கொண்டாடி வருகின்றன. இந்நிலையில் இன்று, மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நாளை ஒட்டி ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியதாவது; ஹரியானா, பஞ்சாப், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் லட்சத்தீவுகளில் வசிப்பவர்களுக்கு அவர்களின் நிறுவன தினத்தை மனதார வாழ்த்துகிறேன்.

இந்த அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் மக்கள் நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் தொடர்ந்து பங்களிக்கவும், அவர்களின் வாழ்க்கை அமைதி மற்றும் செழிப்புடன் இருக்கவும் விரும்புகிறேன். அனைத்து நாட்டு மக்களுக்கும் ஒளிமயமான எதிர்காலம் அமைய வாழ்த்துகிறேன். என்று பதிவிட்டுள்ளார்.

 

The post மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நாளை ஒட்டி ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து! appeared first on Dinakaran.

Tags : President ,Drawupati Murmu ,of ,of Linguistic States ,Delhi ,Tirupati Murmu ,Andhra Pradesh ,Madhya Pradesh ,Karnataka ,Kerala ,Tamil Nadu ,Lakshadwev ,Day of Separation of the Linguistic States ,
× RELATED சொல்லிட்டாங்க…