* அகர்தலாவில் மும்பை – திரிபுரா அணிகள் மோதிய ரஞ்சி ஏ பிரிவு லீக் ஆட்டம் டிராவில் முடிந்தது. மும்பை 450 ரன் & 123/6 டிக்ளேர்; திரிபுரா 302 ரன் & 48/0. மும்பை 3 புள்ளி, திரிபுரா 1 புள்ளி பெற்றன.
* பீகார் அணியுடன் பாட்னாவில் நடந்த சி பிரிவு லீக் ஆட்டத்தில் கர்நாடகா 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. பீகார் 143 ரன் & 212 ரன்; கர்நாடகா 287/7 டிக்ளேர் & 70/2. கர்நாடகா 6 புள்ளிகளை தட்டிச் சென்றது.
* கொல்கத்தாவில் கேரளா – பெங்கால் அணிகள் மோதிய சி பிரிவு லீக் ஆட்டம் டிரா ஆனது. கேரளா 356/9 டிக்ளேர்; பெங்கால் 181/3. இரு அணிகளும் தலா 1 புள்ளிகள் பெற்றன.
* ஜாம்ஷெட்பூர் கீனன் ஸ்டேடியத்தில் ஜார்க்கண்ட் அணியை எதிர்கொண்ட சண்டிகர் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. ஜார்க்கண்ட் 202 ரன் & 130; சண்டிகர் 290 & 45/0. சண்டிகர் 7 புள்ளிகள் பெற்றது.
* அவுரங்காபாத்தில் மேகாலயா அணியுடன் மோதிய மகாராஷ்டிரா 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. மேகாலயா 276 & 185; கர்நாடகா 361 & 104/0. மகாராஷ்டிரா 7 புள்ளிகளை தட்டிச் சென்றது.
* ஆந்திரா அணியுடன் விசாகப்பட்டணத்தில் மோதிய இமாச்சல் இன்னிங்ஸ் மற்றும் 38 ரன் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தியது. ஆந்திரா 344 & 118; இமாச்சல் 500. இமாச்சலுக்கு 7 புள்ளிகள் கிடைத்தது.
* புதுச்சேரி அணியுடன் ராஜிவ் காந்தி ஸ்டேடியத்தில் நடந்த பி பிரிவு லீக் ஆட்டத்தில் ஐதராபாத் இன்னிங்ஸ் மற்றும் 50 ரன் வித்தியாசத்தில் வென்றது. ஐதராபாத் 536/8 டிக்ளேர்; புதுச்சேரி 153 & 333. ஐதராபாத் அணி 7 புள்ளிகள் பெற்றது.
* மத்திய பிரதேசம் – அரியானா, பஞ்சாப் – உத்தர பிரதேசம் மோதிய லீக் ஆட்டங்கள் டிராவில் முடிந்தன. ரயில்வேஸ் 37 ரன் வித்தியாசத்தில் சவுராஷ்டிராவையும், டெல்லி 10 விக்கெட் வித்தியாசத்தில் அசாம் அணியையும் வீழ்த்தின.
The post ரஞ்சி ரவுண்டப்… appeared first on Dinakaran.