தர்மபுரி, அக்.29: தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் நலப்பரம்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகள் பூஜா (18), நல்லம்பள்ளியில் உள்ள தனியார் கல்லூரியில் டி.பார்ம் படித்து வருகிறார். நேற்று முன்தினம் வீட்டில் இருந்த பூஜா திடீரென மாயமானார். அவரை குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து சுப்பிரமணி அளித்த புகாரின் பேரில், பென்னாகரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல் பாப்பிரெட்டிப்பட்டி மருக்கலாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மனைவி லட்சுமி(60). இவர் தனது மகன் வீட்டில் வசித்து வருகிறார். சற்று மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன், லட்சுமி வீட்டில் இருந்து வெளியே சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது மகன் சிவக்குமார் அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post கல்லூரி மாணவி மூதாட்டி மாயம் appeared first on Dinakaran.