அத்திப்பழம் விளைச்சல் பாதிப்பு

ஓமலூர், அக்.29: ஓமலூர், காடையாம்பட்டி வட்டார கிராமங்களில் நாட்டு அத்தி பழங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நாட்டு அத்தி, ஆண்டிற்கு 3 முறை காய்கள் காய்த்து, வருவாய் கொடுத்து வருகிறது. இந்த நிலையில், நடப்பு சாகுபடி காலத்தில் நல்ல சீதோஷ்ண நிலை ஏற்பட்டதால், மிக அதிக அளவில் காய்ப்பு கொடுத்துள்ளது. இந்த நிலையில், கடந்த 10 நாட்களாக தொடர்ந்து பெய்த மழைக்கு அத்திகாய்கள் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. காய்கள் அழுகியும், சிதைந்தும் காணப்படுகிறது. இதனால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

The post அத்திப்பழம் விளைச்சல் பாதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: