×

நாய்கள் கடித்து குதறியதில் புள்ளிமான் பலி குடியாத்தம் அருகே

குடியாத்தம் அக்.29: குடியாத்தம் அருகே நாய்கள் கடித்து குதறியதில் புள்ளிமான் பலியானது. குடியாத்தம் அடுத்த தாட்டிமானபல்லி கிராமத்திற்குள், வனப்பகுதியில் இருந்த வழி தவறி புள்ளி மான் ஒன்று நுழைந்துள்ளது. அதனை கண்டதும், தெரு நாய்கள் விரட்டியதில் சுகுமாருக்கு சொந்தமான மாந்தோப்பிற்குள் மான் புகுந்தது. தொடர்ந்து, நாய்கள் குறைத்துக் கொண்டிருந்த சத்தத்தை அறிந்த அப்பகுதி மக்கள் நாய்களை விரட்ட முயன்றனர். ஆனால் அதற்குள், நாய்கள் புள்ளி மானை கடித்து குதறியதில் மான் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி குடியாத்தம் வனத்துறையினர் சம்பவ இடத்திற்குச் வந்து நாய்களால் கடிபட்டு இறந்த 2 வயது ஆண் புள்ளி மானின் உடலை மீட்டு, கல்லப்பாடி கால்நடை மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் குடியாத்தம் வனப்பகுதியில் உடலை புதைத்தனர்.

The post நாய்கள் கடித்து குதறியதில் புள்ளிமான் பலி குடியாத்தம் அருகே appeared first on Dinakaran.

Tags : Gudiatham ,Thattimanapalli ,Kudiatham ,Sukumar ,
× RELATED மலை உச்சியில் தங்கப்புதையல்?...