மக்கள் குறைதீர் கூட்டம்

 

திருவாரூர், அக்.29: திருவாரூர் மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டத்தில் 93 மனுக்கள் வந்தன. திருவாரூரில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் 93 மனுக்களை கலெக்டர் சாருஸ்ரீ பெற்றுகொண்டார். திருவாரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டமானது நேற்று கலெக்டர் சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது. இதில் பொது மக்கள் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 93 மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர்.

பொது மக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் சாருஸ்ரீ சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி உடனடியாக நடவடிக்கையெடுக்க உத்தரவிட்டார். மேலும் வழக்கம்போல் தரைதளத்தில் மாற்றுதிறனாளிகளிடம் அவர்களது கோரிக்கை மனுக்களை பெற்றுகொண்டார். கூட்டத்தில் டி.ஆர்.ஒ சண்முகநாதன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொ) ராஜா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் புவனா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post மக்கள் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: