×
Saravana Stores

பாடாலூர் வட்டார வள மையத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தீபாவளி பரிசுகள் வழங்கல்

 

பாடாலூர், அக்.29: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூரில் வட்டார வளமையத்தின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான பகல் நேர பராமரிப்பு மையத்தில் தீபாவளி விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அய்யாசாமி தலைமை வகித்தார். மாவட்ட கல்வியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் ராஜா முன்னிலை வகித்தார். வட்டார கல்வி அலுவலர்கள் விஜயா, சின்னசாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இம்மையத்தில் பல்வேறு வகையான மாற்றுத்திறனாளிகள் சுமார் 50 பேர் பயின்று வருகின்றனர். தீபாவளியை சிறப்பாக கொண்டாடும் நோக்கில் தனியார் அமைப்பு இணைந்து சுமார் 50 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு புத்தாடைகள், இனிப்புகள், உணவுப்பொருட்கள் வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்ந்தனர்.

இந்நிகழ்வில் ஆசிரியர் திருஞானசம்பந்தம், மாற்றுத்திறனாளி மாணவர்கள், மாணவர்களின் பெற்றோர்கள், தனியார் அமைப்பு நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக வட்டார வள மேற்பார்வையாளர் (பொ) வஹிதாபானு அனைவரையும் வரவேற்றார். வட்டார ஒருங்கிணைப்பாளர் மோகன் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் வட்டார வள மையத்தில் பணிபுரியும் சிறப்பு பயிற்றுநர்கள் செய்திருந்தனர்.

The post பாடாலூர் வட்டார வள மையத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தீபாவளி பரிசுகள் வழங்கல் appeared first on Dinakaran.

Tags : Diwali ,Padalur Regional Resource Center ,Padalur ,Vattara Valamaiyam ,Aladhur taluk ,Perambalur ,District Elementary Education Officer ,Ayyasamy ,District ,Dinakaran ,
× RELATED லண்டனில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டம்..!!