முத்துப்பேட்டையில் போலியோ சொட்டு மருந்து விழிப்புணர்வு பைக் பேரணி

முத்துப்பேட்டை, அக். 26: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை, வேதாரண்யம், மருதூர் ஆயக்காரன்புலம் ரோட்டரி சங்கம் சார்பில் 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் அவசியம் போலியோ சொட்டு மருந்து போட வேண்டும் என வலியுறுத்தி வேதாரண்யம் முதல் முத்துப்பேட்டை வரையிலான ஒரு நாள் பைக் விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. வேதாரண்யதில் டிஎஸ்பி சுபாஷ் சந்திரபோஸ் பேரணியை துவக்கி வைத்தார். விழிப்புணர்வு பேரணி அங்கிருந்து புறப்பட்டு மருதூர், ஆயக்காரன்புலம், வாய்மேடு, துளைசியாபட்டினம், இடும்பாவனம், தில்லைவிளாகம் வழியாக கோபாலசமுத்திரம் வந்தது. அங்கு முத்துப்பேட்டை ரோட்டரி சங்க தலைவர் சாகுல் ஹமீது வரவேற்றனர்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்டு முத்துப்பேட்டை நகருக்கு வந்த விழிப்புணர்வு பேரணி பின்னர் புதிய பேருந்து நிலையத்தில் நிறைவு பெற்றது. அங்கு பொதுமக்கள் மத்தியில் போலியோ சொட்டு மருந்தின் அவசியம் குறித்து விளக்கப்பட்டது. இதில் சாசன தலைவர்கள் கிருஷ்ணமூர்த்தி, கோடிலிங்கம், மாவட்ட தலைவர் கோவி.ரெங்கசாமி, உதவி ஆளுநர் சிவக்குமார் தலைவர்கள் வேதாரண்யம் ஜெயசந்திரன், மருதூர் தமிழரசன், ஆயக்காரன்புலம் விஸ்வநாதன், முன்னாள் தலைவர்கள் ராஜ்மோகன், குமரேசன், நிர்வாகிகள் சீமான், பாலசந்தரர், ராம்குமார், அந்தோணி ராஜா, இளையராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post முத்துப்பேட்டையில் போலியோ சொட்டு மருந்து விழிப்புணர்வு பைக் பேரணி appeared first on Dinakaran.

Related Stories: