×

ஆலத்தூர் தாலுகாவில் வெளுத்து வாங்கிய மழை

 

பாடாலூர், அக். 26: ஆலத்தூர் தாலுகாவில் நேற்று மாலை நல்ல மழை பெய்ததால் குளிர்ச்சியான சீதோஷ்ணம் நிலவியதால் பொதுமக்கள் நிம்மதியுடன் தூங்கினர். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா கடந்த 2 நாட்களாகவே அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் பாடாலூர், திருவளக்குறிச்சி, இரூர், ஆலத்தூர்கேட், காரை, புதுக்குறிச்சி, தெரணி, கொளக்காநத்தம், அயினாபுரம், அணைப்பாடி, கொளத்தூர், நாரணமங்கலம், விஜயகோபாலபுரம், நாட்டார்மங்கலம், கூத்தனூர், செட்டிகுளம், மாவிலிங்கை, குரூர், சிறுவயலூர், நக்கசேலம், அடைக்கம்பட்டி, டி.களத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் அவ்வப்போது விட்டு விட்டு பலத்த மழை பெய்தது. இதனால் மாலை நேரத்தில் குளு, குளுவென காணப்பட்டது. இரவில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இந்த மழை மானாவாரி சாகுபடி செய்துள்ள மக்காச்சோளம், பருத்தி வயலுக்கும், சின்ன வெங்காயம் சாகுபடிக்கு ஏற்றதாகும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

The post ஆலத்தூர் தாலுகாவில் வெளுத்து வாங்கிய மழை appeared first on Dinakaran.

Tags : Alatur taluk ,Padalur ,Aladhur taluk ,Perambalur district ,Alathur taluk ,Dinakaran ,
× RELATED தனியார் டயர் தொழிற்சாலை ஒப்பந்த தொழிலாளி உயிரிழப்பு