×

மூச்சுத்திணறி முதியவர் சாவு

ஈரோடு, அக்.26: பீகார் மாநிலம் கவுஜ்அட மாவட்டத்தை சேர்ந்தவர் மக்சுதன் பஸ்வான் (67). இவர், ஈரோடு ஆர்.என்.புதூரில் உள்ள மில்லில் பாய்லர் பிரிவில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் மாலை மக்சுதன் பஸ்வானுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

இதைப்பார்த்த சக தொழிலாளர்கள் அவரை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு மக்சுதன் பஸ்வான் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மூச்சுத்திணறி முதியவர் சாவு appeared first on Dinakaran.

Tags : Erode ,Maksuthan Paswan ,Gaujada district of ,Bihar ,RN Putur ,
× RELATED சொத்துவரி குறைவாக விதித்த...