×

வெங்கடேஸ்வரா வித்யாலயா பள்ளியில் கண் பரிசோதனை முகாம்

கோபி, அக்.26: கோபி அருகே தாசம்பாளையத்தில் செயல்பட்டு வரும்  வெங்கடேஸ்வரா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. ஈரோடு டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மற்றும்  வெங்கடேஸ்வரா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் பள்ளியில் நடைபெற்ற கண் பரிசோதனை முகாமை பள்ளியின் செயலாளர் ஜி.பி.கெட்டிமுத்து தொடங்கி வைத்தார்.

இந்த கண் பரிசோதனை முகாமில் பள்ளியில் உள்ள 2 ஆயிரம் மாணவ, மாணவியர் பயன் பெற்றனர். கல்வி மற்றும் உடல்திறன் மேம்பாட்டிற்கு மட்டுமின்றி மாணவ, மாணவியரின் உடல் நலத்திற்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருவதாக பள்ளியின் செயலாளர் ஜி.பி.கெட்டிமுத்து தெரிவித்தார்.

The post வெங்கடேஸ்வரா வித்யாலயா பள்ளியில் கண் பரிசோதனை முகாம் appeared first on Dinakaran.

Tags : Venkateswara Vidyalaya School ,Gobi ,Venkateswara Vidyalaya Matriculation High School ,Dasampalayam ,Erode Dr. Aggarwal Eye Hospital ,Venkateswara Vidyalaya Matric High School ,Dinakaran ,
× RELATED கோபி அருகே வீட்டில் கஞ்சா செடி வளர்த்த முதியவர் கைது