×

முகவாதம் உள்ளதா? கவலை வேண்டாம்

கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில் உள்ள தி சுசான்லி அக்குபஞ்சர் மற்றும் ஆயுர்வேதிக் கிளினிக் மருத்துவர் உஷா ரவி கூறியதாவது: முகவாதம் ஏற்பட பல காரணங்கள் இருக்கின்றன. குறிப்பாக நவம்பர், ஜனவரி மாதங்களில் பெண்களுக்கு அதிகம் ஏற்படுகிறது. விழிகளை இமைக்கவும், சிமிட்டி பார்க்கவும் முடியாத நிலை ஏற்படும். ஒரு சிலருக்கு விழிகளை மூடவும் முடியாது, திறந்த வண்ணமாக துாங்குவார்கள்.முகம் ஒரு பக்கமாக இழுத்த வண்ணமாக இருக்கும். இதனால் முகத்தை அசைக்கவே முடியாது. தாடைகள் தடைப்பட்டு இருக்கும். உணவுகளை உட்கொள்ள சிரமம் ஏற்படும் உதடுகளை திறந்து, மூடுவதும் சிரமமாக இருக்கும். புருவங்களை உயர்த்தியோ, தாழ்த்தியோ பார்ப்பதற்கும் சிரமமாக இருக்கும்.சில வகை வைரஸ்களின் தாக்கத்தால் கூட முகவாதம் ஏற்படலாம்.

பல், வாய், காது போன்ற பகுதிகளில் செய்யப்படும் அறுவை சிகிச்சைகளின் பின் விளைவுகளால் சிலருக்கு முகவாதம் ஏற்படலாம். மூளை, மண்டை ஓடு மற்றும் முக எலும்பு முறிவுகளால் கூட முகவாதம் வரும். பக்கவாதத்துடன் சேர்ந்தே சில பேருக்கு முகவாதம் வரலாம். புகைபழக்கம், டென்ஷன், தூக்கமின்மை, துக்கம் மற்றும் வேலைபளு காரணங்களால் கூட முகவாதம் வரலாம். இதற்கு அருமையான மருத்துவமுறை அரோமா சிகிச்சை முறைதான். சிகிச்சையின் ஒரு பகுதியாக வாயில் நீர் சிகிச்சை, கைகளில் காந்த சிகிச்சை, முக யோகா, அக்குபிரஷர் மசாஜ் என பலவகை துணை சிகிச்சை முறைகள் ஒன்றிணைந்து செய்யும் பொழுது சில நாட்களிலேயே நல்ல நிவாரணம் முகவாதம், முகநரம்பு வாதம் நோயாளிகளுக்கு கிடைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post முகவாதம் உள்ளதா? கவலை வேண்டாம் appeared first on Dinakaran.

Tags : Usha Ravi ,The Susanli Acupuncturist ,Ayurvedic Clinic ,Manjakuppam ,Cuddalore ,Dinakaran ,
× RELATED ஐயப்பன் அறிவோம் 49: முக்குழியில் தங்கினார்