×

இரட்டிப்பு மகிழ்ச்சி தரும் தீபாவளி ஷாப்பிங்

இந்தியாவில் தீபாவளியின் போது மட்டுமே பண்டிகை நேர ஷாப்பிங் அதிகம் நடக்கிறது. இதனால் தீபாவளி தொடங்கும் முன்னரே அதற்கான ஆயத்தப்பணிகளில் வியாபார நிறுவனங்கள் ஈடுபடுகின்றனர். தீபாவளி நேரம் ஷாப்பிங் என்பது பெரிய பொருளாதார சந்தை முன்னேற்றத்தை ஏற்படுத்துகிறது. இந்த ஆண்டு நாடு முழுவதும் சுமார் 4.5 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு தீபாவளி ஷாப்பிங் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறு தொழில் முதல் பெரிய தொழில் நிறுவனங்கள் வரை அனைவரும் தீபாவளி நேர விற்பனையை வைத்தே பெரிய லாபத்தை அடைய வேண்டியுள்ளது. அனைத்து விதமான பொருட்களும் தீபாவளி ஷாப்பிங்கின் போது சந்தைப்படுத்தப்படுகின்றன.

ஆடைகள், பட்டாசு, தங்கம், வெள்ளி, மின்னணு சாதனங்கள், வீட்டு உபயோக பொருட்கள், காலணிகள், அனைத்துவிதமான அலங்காரப் பொருட்கள், விளக்குகள், பேன்சி உலோக நகைகள், மோட்டார் வாகனங்கள் என அனைத்துமே தீபாவளி நேர ஷாப்பிங்ல் இடம்பெறுகின்றன. எத்தனை முறை ஷாப்பிங் செய்தாலும் வீட்டிற்கு வந்தவுடன் எதையோ மறந்துவிட்டோம் என மீண்டும் கடைக்கு செல்வோம். தீபாவளி பண்டிகை முடிந்த பிறகும் கூட நாம் இன்னும் அதிக பொருட்களை வாங்கி தீபாவளியை கொண்டாடி இருக்கலாம் என்றே தோன்றும். ஏனெனில் ஒவ்வொரு வருடமும் தீபாவளிக்கு என தயாராகும் பொருட்களின் எண்ணிக்கை நீண்டு கொண்டே போகும்.

தீபாவளிக்கு எற்றவாறு புதிய டிசைன்களை அறிமுகப்படுத்தும் நோக்கில் ஆடைகள் முதல் நகைகள் வரை அனைத்தும் தனிப்பட்ட கவனத்துடன் உருவாக்கப்படுகிறது. பெண்களுக்கான குண்டூசி முதல் காலணி வரை அனைத்தும் சென்ற ஆண்டை விட இந்தாண்டு வேறுபட்ட வகையில் இருக்க வேண்டும் என்பதற்காக அசத்தல் டிசைன்களுடன் தயாரிக்கப்படுகின்றன. அதுபோல் ஆண்கள் மற்றும் சிறுவர், சிறுமியர் ஆடைகள், அணிகலன்கள் போன்றவையும் இந்த தீபாவளிக்கு புதுசு என்றவாறே தயாரிக்கப்படுகின்றன. டிசைனர் பேக், பர்ஸ், கலர்புல் காலணி, புதிய ஹேர்ஸ்டைல் என தங்கள் உருவமைப்பையே தீபாவளிக்கு என புதியதாய் மாற்றி விடுகின்றனர்.

தீபாவளி ஷாப்பிங்கில் தற்போது ஏராளமான மின்னனு பொருட்கள் இடம்பெறுகின்றன. அன்றாட பயன்பாட்டு பொருள் முதல் பொழுது போக்கு சாதனங்கள் வரை எண்ணற்ற புதிய புதிய பொருட்களை தீபாவளி சமயத்தில் வாங்குகின்றனர். அதுபோல் தங்கம், வைர, பிளாட்டின நகைகள் என்பதுடன் வெள்ளி பொருட்கள் போன்றவாறு விலையுயர்ந்த பொருட்களும் தீபாவளி ஷாப்பிங்கில் இடம் பெறுகின்றன. ஆண்டு முழுவதும் உழைத்த உழைப்பிற்கு ஏற்றவாறு ஒவ்வொரு நிறுவனமும் அவர்களின் தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குகின்றன. இந்த தீபாவளி போனஸ் தான் மக்களின் வாங்கும் தன்மையையும் அதிகரிக்கச் செய்கிறது. சம்பளத்தை தவிர கூடுதலாக இந்த வருவாய் குடும்பத்தினர் தேவையை பூர்த்தி செய்ய உதவுகிறது. இதுவே தீபாவளி பண்டிகையை இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் கொண்டாட வைக்கிறது, வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களும் தங்களால் இயன்ற சிறு ஷாப்பிங் செய்தாவது தீபாவளி பண்டிகை மகிழ்ச்சியில் மனதார இணைந்து விடுகின்றனர். அனைத்து தரப்பு மக்களையும் இந்த பண்டிகை மகிழ்ச்சி என்ற ஒற்றைப் புள்ளியில் ஒருங்கிணைத்து விடுகிறது.

* தீபாவளி ஷாப்பிங் பணத்தை மிச்சப்படுத்த ஸ்மார்ட் வழிமுறைகள்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் அதிகமாக ஷாப்பிங் செய்கின்றனர். அதேவேளையில் செலவு கைமீறிப் போய்விடுமோ என்ற பதற்றமும் பலருக்கு இருக்கிறது. தேவைகளில் சமரசம் செய்துகொள்ளாமல், பட்ஜெட்டுக்குள் பொருட்களை வாங்கி, மகிழ்ச்சியாக பண்டிகையைக் கொண்டாட வல்லுநர்கள் கொடுக்கும் சில யோசனைகள்:
* பண்டிகைக் காலத்தில் உங்கள் பட்ஜெட்டிற்குள் செலவுகளைக் கட்டுப்படுத்த, ஸ்மார்ட் ஷாப்பிங் செய்வது அவசியம். தீபாவளி போன்ற பண்டிகைகளை முன்னிட்டு பொருட்களை வாங்குவதற்கு தெளிவான பட்ஜெட்டை நிர்ணயித்து ஷாப்பிங்கைத் தொடங்க வேண்டும்.
* வாங்குவதற்கு முன் திட்டமிட வேண்டும். உங்களுக்குத் தேவையானவற்றின் பட்டியலை உருவாக்கி, அதில் முதலில் எதை வாங்கலாம், எதைத் தவிர்க்கலாம் என்று முடிவு செய்யுங்கள். கையிருப்பும் மற்றும் செலவுகள் குறித்த புரிதலுடன் ஷாப்பிங் செய்தால் பணம் விரயம் ஆவதைத் தடுக்க முடியும்.
* விலை முதலிய விவரங்களை பல்வேறு இடங்களில் ஒப்பிட்டுப் பார்க்கவும். இதற்கு தொழில்நுட்ப வசதிகளையும் பயன்படுத்தலாம்.
* கடைசி நிமிடத்தில் அவசரமாக பொருட்களை வாங்குவது அதிக செலவுக்கு வழிவகுக்கும். இதைத் தவிர்க்க பண்டிகைக்கு சில மாதங்கள்நாட்கள் முன்பாகவே ஷாப்பிங் செய்வது நல்லது. பண்டிகைச் செலவுகளை ஓரிரு மாதங்களுக்குப் பிரித்துக் கொண்டு வாங்கும்போது நிதானமாக வேண்டிய பொருட்களை பார்த்து வாங்கலாம்.
* தீபாவளிப் பண்டிகையை ஒட்டி எல்லா நிறுவனங்களிலும் கடைகளிலும் கவர்ச்சிகரமான சலுகைகள் அறிவிக்கிறார்கள். குறைவான விலை மட்டுமின்றி, கேஷ்பேக், கூப்பன்கள், ரிவார்டு பாயிண்ட், பரிசுப் பொருட்கள் என சலுகைகள் கிடைக்கின்றன. இவற்றில் சிறந்த சலுகையை பயன்படுத்தி வாங்கும்போது அதிக செலவு செய்வதைத் தவிர்க்கலாம். போனஸாக சில பரிசுப் பொருட்களும் கிடைக்கும்.
* உங்கள் சேமிப்பை அதிகரிக்க கேஷ்பேக் ஆஃபர்கள், தள்ளுபடி குறியீடுகள் மற்றும் தொகுக்கப்பட்ட டீல்கள் ஆகியவற்றைப் பார்த்து வாங்குங்கள்.
* வீட்டிலேயே செய்யக்கூடியதை கடையில் வாங்குவதைத் தவிர்க்கலாம்.
* குடும்பத்தில் உள்ள அனைவரின் தேவைகளையும் அனுசரித்து பொருட்களை வாங்குங்கள்.

* தீபாவளியை முன்னிட்டு காட்டன் ஹவுஸில் சலுகை விற்பனை
திருவான்மியூர் சிக்னல் அருகே, ஆர்.வேணுகோபால் நிறுவிய காட்டன் ஹவுஸ் கடையில் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பிரத்யேக ஆடைகள், வீட்டு உபயோக பொருட்கள் புகழ்பெற்ற உற்பத்தியாளர்களிடம் இருந்து நேரடியாக பெற்று, குறைந்த நிலையில் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது, தீபாவளியை முன்னிட்டு பெண்களுக்கான நவநாகரிகமான ஆடை வகைகள், குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக, ஆயிரக்கணக்கான மாடல்களில் புடவைகள், சுடிதார்கள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

ஆண்களுக்கான புத்தாடைகள், பட்டு வேட்டிகள் மற்றும் வெஸ்டர்ன் வேர் டீன் ஏஜ் பாய்ஸ் ஜீன்ஸ், டீசர்ட், பெடல் ஷூ சமீபத்திய பட்டு தோத்தி உள்ளிட்ட ட்ரெண்டி கலெக்ஷன்கள் உள்ளன. ரூ.500 முதல் ரூ.1 லட்சம் வரையிலான பட்டுத் துணிகள் உள்ளன. குழந்தைகளுக்கு அற்புதமான துணிகளில் கண்கவரும் அனைத்து டிசைன்களில் பாரம்பரிய பட்டு துணிகள் பாவாடை, சாப்டான நெட் கவுன்கள் சுடிகள் பப்பி மாடல்களில் உள்ளன. பெண் குழந்தைக்கு போட்டியாக ஆண் குழந்தைகளுக்கு இதுவரை கண்டிடாத பல மாடல்கள் அனைத்தும் மேற்கத்திய மாடல்கள் குழந்தைகள் விரும்பி அணியும் துணிகள், அனைத்து குழந்தைகளும் விரும்பும் மிருதுவான துணிகளையே இந்தியா முழுவதும் கலெக்ட் செய்துள்ளோம். சிறுவர்கள் மற்றும் சிறுமிகளுக்கு செருப்புகளுக்கான தனி பிரிவு உள்ளது. பெண் மற்றும் ஆண் காலணிகள், பரிசு பொருட்கள் போன்றவை இடம்பெற்றுள்ளன.

The post இரட்டிப்பு மகிழ்ச்சி தரும் தீபாவளி ஷாப்பிங் appeared first on Dinakaran.

Tags : Diwali ,India ,
× RELATED மீனாட்சி படம் திருட்டு கதையா?