×
Saravana Stores

மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம்

 

பாடாலூர், அக்.25: ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (UDID) வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும்.

சிறப்பு முகாம் நேற்று நடந்தது. முகாமுக்கு மாவட்ட மாற்றுத்தினாளிகள் நல அலுவலர் சீனிவாசன் தலைமை வகித்தார். இந்த முகாமில் பல்வேறு வகையான மாற்றுத் திறனாளிகள் தங்களுடைய பராமரிப்பாளர்களுடன் கலந்துகொண்டு தங்களுக்கு தேவையான மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை புதிதாக பெறுவதற்கும், புதுப்பித்துக் கொள்ளவும் நேரடியாக 56 பேர் விண்ணப்பித்தனர்.

அப்போது சிறப்பு மருத்துவர்கள் அவர்களை பரிசோதனை செய்து அடையாள அட்டை பெற பரிந்துரை செய்தனர். இதில் 48 பேருக்கு தேசிய அடையாள அட்டை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் திட்டப் பணியாளர் சத்யா, தரவு உள்ளீட்டாளர் பிரசாத், உரிமைகள் திட்ட உதவியாளர் சந்தியா, உரிமைகள் திட்ட தரவு உள்ளீட்டாளர் வினோதா, சிறப்பு வாகன ஊர்தி அலுவலர் சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் appeared first on Dinakaran.

Tags : Padalur ,Chettikulam Government Primary Health Centre ,Aladhur Taluk ,Perambalur District ,Dinakaran ,
× RELATED ஆலத்தூர் தாலுகாவில் வெளுத்து வாங்கிய மழை