பெரம்பலூர் மாவட்டத்தில் சிறந்த தோட்டக்கலை பயிர் சாகுபடிக்கு ரூ.1 லட்சம் பரிசு

 

பெரம்பலூர், அக்.25: பெரம்பலூர் மாவட்டத்தில் இயற்கை முறையில் சிறப்பாக தோட்டக்கலைப் பயிர் சாகுபடி செய்திடும், விவசாயிகளுக்கு தோட்டக் கலைத் துறையின் சார்பில் பரிசுகள் வழங்கப்பட உள்ளது என்று மாவட்டக் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

பெரம்பலூர் மாவட்டத்தில் 2024-25 ம்ஆண்டிற்கு இயற்கை முறையில் தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் பொருட்டு, சிறப்பாக செயல்படும் இயற்கை விவசாயிகளை தேர்வு செய்து, மாநில அளவில் விருதுகள் வழங்கப்பட உள்ளன. பங்கேற்பாளர்கள் அனைவரும் விவசாயிகளாக இருத்தல் மற்றும் இயற்கை வேளாண்மை திறன்பட செய்து கொண்டிருப்பதுடன் Validity Scope certificate பெற்றிருத்தல் வேண்டும்.

மேலும், மாவட்ட அளவிலான தேர்வு குழுவிற்கு பங்கேற்பாளர்கள் தனது சாதனையை நியாயமான முறையில் விளக்கிட வேண்டும். மாநில அளவில் தேர்வு செய்யப்படும் விவசாயிகளுக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சம், இரண்டாவது பரிசாக ரூ.60ஆயிரம், மூன்றாவது பரிசாக ரூ.40ஆயிரம் வழங்கப்பட உள்ளது.

இந்தப் போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள விவசாயிகள் தங்களது விவரத்தினை உழவன் செயலியில் பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறது. பதிவு செய்த விவசாயிகள் சம்மந்தப்பட்ட வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் பதிவு கட்டணமாக ரூ100-ஐ செலுத்தி பங்கேற்பிற்கான விண்ணப்ப படிவத்தினை (இணைப்பு – II) பூர்த்தி செய்து சமர்ப்பித்து பயன் பெறலாம்.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

The post பெரம்பலூர் மாவட்டத்தில் சிறந்த தோட்டக்கலை பயிர் சாகுபடிக்கு ரூ.1 லட்சம் பரிசு appeared first on Dinakaran.

Related Stories: