×

தீபாவளியை முன்னிட்டு புகழூர் நகர திமுக சார்பில் மூத்த நிர்வாகிகளுக்கு இனிப்பு

 

வேலாயுதம்பாளையம், அக்.25: புகழூர் நகர திமுக செயலாளரும், நகராட்சி தலைவருமான குணசேகரன் ஏற்பட்டிருக்கும் ஏற்பாட்டின்பேரில் நகராட்சிக்குட்பட்ட உட்பட்ட அனைத்து வார்டு கழக செயலாளர்கள், மாவட்ட, நகர கழக அணி நிர்வாகிகள், பூத் கமிட்டி முகவர்கள் மற்றும் கழக மூத்த முன்னோடிகள் அனைவருக்கும் தீபாவளி திருநாளினை முன்னிட்டு வீடுகளுக்கு நேரடியாக சென்று இனிப்பு வழங்கினார்.

நிகழ்ச்சியில் நகர கழக அவைத் தலைவர் வாங்கிலி மாவட்ட தொ.மு.ச தலைவர் அண்ணாவேலு பொதுக்குழு உறுப்பினர்கள் சாமிநாதன், சிவகாமி சண்முகம், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் நவாஸ்கான், நகர கழக இளைஞரணி செயலாளர் நந்தா, நகர சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் அப்பாஸ், அனைத்து வார்டு கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், பூத் கமிட்டி முகவர்கள் மற்றும் உறுப்பினர்கள், சார்பு அணி அமைப்பாளர்கள், கழக மூத்த முன்னோடிகள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

The post தீபாவளியை முன்னிட்டு புகழூர் நகர திமுக சார்பில் மூத்த நிர்வாகிகளுக்கு இனிப்பு appeared first on Dinakaran.

Tags : Diwali ,DMK ,Bukhalur ,Velayuthampalayam ,Bukhalur City ,Municipal President ,Gunasekaran ,Dinakaran ,
× RELATED மீனாட்சி படம் திருட்டு கதையா?