×
Saravana Stores

எண்ணூர் கடற்கரையில் தீவிர தூய்மை பணி

திருவொற்றியூர்: திருவொற்றியூர் மண்டலம், 1வது வார்டுக்கு உட்பட்ட தாழங்குப்பம் கடற்கரை பகுதியில் தினமும் ஏராளன மக்கள் காலை, மாலை நேரங்களில் பொழுதுபோக்குவது வழக்கம். இவ்வாறு வரும் பொதுமக்கள் தாங்கள் கொண்டு வரும் வாட்டர் பாட்டில் மற்றும் பிளாஸ்டிக் பைகள் போன்றவற்றை அங்கேயே வீசிவிட்டு செல்கின்றனர். இதனால் கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் ஏராளமான பிளாஸ்டிக் மற்றும் குப்பை சிதறி கிடக்கிறது.

இந்த நிலையில் குப்பையை அகற்றி தூய்மைப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில், மாநகராட்சி சார்பில் தாழங்குப்பம் கடற்கரை பகுதியில் தீவிர தூய்மைப்பணி மாநகராட்சி சிறப்பு அதிகாரி கோவிந்தராஜ் தலைமையில் நடந்தது. 50க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள், கடற்கரையில் சிதறி கிடந்த வாட்டர் பாட்டில் பிளாஸ்டிக் பை மற்றும் குப்பையை சேகரித்து அப்புறப்படுத்தினர்.

மாநகராட்சி அதிகாரிகள் புருஷோத்தமன், பாபு, சுமித்ரா, தூய்மை அதிகாரிகள் என்விரோ, ராம்கி, பிரபாகரன், பரணி உள்பட பலர் கலந்து கொண்டனர். கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் குப்பையை சாலையோரம் வீசாமல் அதற்காக வைக்கப்பட்டுள்ள தொட்டியில் போடுமாறு மாநகராட்சி அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்தனர்.

The post எண்ணூர் கடற்கரையில் தீவிர தூய்மை பணி appeared first on Dinakaran.

Tags : Ennore beach ,Tiruvotiyur ,Thiruvotiyur Mandal ,Thalanguppam beach ,1st Ward ,
× RELATED திருவொற்றியூர் பகுதியில் கால்வாய்...