×
Saravana Stores

மணலி ஆரம்ப பள்ளியில் புதிய கட்டிடம் திறக்கப்படுமா? மாணவர்கள் எதிர்பார்ப்பு

திருவொற்றியூர்: மணலி மண்டலம், 21வது வார்டுக்கு உட்பட்ட பாடசாலை தெருவில் சென்னை மாநகராட்சி ஆரம்பப்பள்ளி உள்ளது. இங்கு 630 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வகுப்பறைகள் இல்லை. இதனால் கூடுதல் வகுப்பறைகள் கட்டித் தர வேண்டும் என்று வார்டு கவுன்சிலர் முல்லை ராஜேஷ் சேகர் மண்டல குழு கூட்டத்தில் தலைவர் ஏ.வி.ஆறுமுகத்திடம் கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து சென்னை மாநகராட்சி மற்றும் எண்ணூர் காமராஜ் துறைமுகம் சிஎஸ்ஆர் நிதியில், ரூ1.80 கோடி செலவில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டுமான பணி கடந்த 3 மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டன. 6 வகுப்பறைகள், கழிவறை மற்றும் கட்டிட சுவர்களில் வண்ண ஓவியங்களுடன் புதிய கட்டிடம் தயார் நிலையில் உள்ளது.

இப்பள்ளியில் இடப்பற்றாக்குறை காரணமாக ஒரே அறையில் இரண்டு வகுப்புகளை சேர்ந்த மாணவ, மாணவியர்கள் இடநெருக்கடியில் அமர்ந்து படிப்பதாலும், தற்போது மழைக்காலம் தொடங்கி விட்டதால் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் சிரமம் ஏற்படுகிறது.  எனவே, கட்டுமான பணி முடிந்து தயார் நிலையில் உள்ள புதிய கட்டிடத்தை விரைவாக மாணவ, மாணவியரின் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post மணலி ஆரம்ப பள்ளியில் புதிய கட்டிடம் திறக்கப்படுமா? மாணவர்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Tags : Manali Primary School ,Thiruvottiyur ,Chennai Municipal Corporation Primary School ,under ,21st Ward, Manali Mandal ,Dinakaran ,
× RELATED திருவொற்றியூர் பகுதிகளில் கால்வாய் இணைப்பு பணி துவக்கம்