போடி, அக். 25: தேனி மாவட்டம் போடி முதல்வர் காலனி இரண்டாவது தெருவை சேர்ந்தவர் ராஜகோபால் (66). ஜவுளி வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி ஆண்டாள். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 8 வருடமாக தீராத வயிற்றுவலியால் ராஜகோபால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த ராஜகோபால் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆண்டாள் கொடுத்த புகாரின் பேரில் போடி நகர் போலீசார் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
The post ஜவுளி வியாபாரி தற்கொலை appeared first on Dinakaran.