×
Saravana Stores

பிரிட்டன் மன்னர் ஆன பிறகு முதன்முறையாக பயணம்: பசுபிக் தீவு நாடான சமோவாவில் மனைவியுடன் மன்னர் சார்லஸ்

பிரிட்டன் மன்னராக முதன்முறையாக பசுபிக் தீவு நாடான சமோவாவுக்கு சென்றுள்ள சார்லஸுக்கு அந்நாட்டு பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரிட்டன் அரசு குடும்பத்தில் உயர் பதவியில் இருக்கும் மன்னர் மற்றும் ராணி ஆகியோர் சமோவா தீவு நாட்டிற்கு சென்று அங்குள்ள மக்களை சந்திப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதற்கு முன் ராணி இரண்டாம் எலிசபத் அம்மக்களை சந்தித்து இருக்கும் நிலையில், மன்னராக பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக சார்லஸ் மனைவி கமிலா உடன் அங்கு சென்றுள்ளார்.

அந்நாட்டு தலைநகர் அபியாவில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் மன்னர் சார்லஸ் அவரது மனைவிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் பழங்குடியின மக்களுடன் அமர்ந்து அவர்களது கலாச்சார நடனத்தையும் சார்லஸ் மற்றும் காமிலா ஆகியோர் கண்டு களித்தனர். தொடர்ந்து அவர்களின் பச்சை குத்தும் முறை, கைவினை தொழில், ஆடை தயாரிப்பு முறையையும் அரசு தம்பதி கேட்டறிந்தனர். முன்னதாக சமோவாவில் மாவோட பகுதியில் உள்ள அலையாத்தி காடுகளை அம்மக்களுடன் நடந்தே சென்று மன்னர் சார்லஸ் பார்வையிட்டார். மூன்று நாள் பயணமாக நேற்று மனைவியுடன் அங்கு சென்றடைந்த மன்னர் சார்லஸ் பசுபிக் தீவுகளின் மேலும் பல பகுதிகளை பார்வையிட உள்ளார்.

The post பிரிட்டன் மன்னர் ஆன பிறகு முதன்முறையாக பயணம்: பசுபிக் தீவு நாடான சமோவாவில் மனைவியுடன் மன்னர் சார்லஸ் appeared first on Dinakaran.

Tags : Britain ,King Charles ,Pacific island nation ,Samoa ,Charles ,King of ,British ,Dinakaran ,
× RELATED எங்களிடம் திருடியதை திருப்பி...