×
Saravana Stores

கரூர் ஆர்டிஓ அலுவலக வளாகத்தில் கால்நடைகள் நடமாட்டம்

 

கரூர், அக். 24: கரூர் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் ஆடு, மாடு போன்ற கால்நடைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வடக்கு பிரதட்சணம் சாலையோரம் கோட்டாட்சியர் அலுவலகம் செயல்படுகிறது. இந்த பகுதி சாலையோரம் வளர்க்கப்படும் கால்நடைகள் அவ்வப்போது, சாலையில் நடந்து செல்வதோடு, கோட்டாட்சியர் அலுவலக உட்புறமும் சென்று வருகிறது. இதன் காரணமாக மற்ற வாகன போக்குவரத்து இந்த பகுதிகளில் எளிதாக நடைபெறாமல் உள்ளது. மேலும், கால்நடைகளின் நடமாட்டம் காரணமாக வடக்கு மற்றும் தெற்கு பிரதட்சணம் சாலைகளில் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு மற்றும் விபத்துக்களும் நடைபெறுகிறது. எனவே, இதனை கட்டுப்படுத்தும் வகையில் இந்த பகுதிகளில் கால்நடைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

The post கரூர் ஆர்டிஓ அலுவலக வளாகத்தில் கால்நடைகள் நடமாட்டம் appeared first on Dinakaran.

Tags : Karur RTO ,Karur ,Karur Kotakshiar ,Kotakshiar ,North Pratatsanam road ,Karur Corporation ,Dinakaran ,
× RELATED கரூர்- கோவை சாலையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்