×
Saravana Stores

பரமத்தியில் பரவலாக மழை

க.பரமத்தி, அக்.23: க.பரமத்தி அருகே அத்திப்பாளையம் சுற்றுப்பகுதியில் நேற்று மிதமான மழை கொட்டி தீர்த்தது. க.பரமத்தி ஒன்றியம் அத்திப்பாளையம் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக அளவிற்கு அதிகமாக 100 செல்சியஸ் டிகிரி போல் வெயில் வாட்டியது. இதனால் பொதுமக்கள் வெளியே பொதுமக்கள் செல்லவே அச்சப்பட்டனர். இந்நிலையில் நேற்று முன்தினம் காலையில் திடீரென குளிர்ந்த காற்று வீசியதோடு, சுமார் 1 மணி நேரம் மிதமான மழை பெய்தது.

திடீரென பெய்த மழையால் அத்திப்பாளையம் சுற்று பகுதியில் இருந்து பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கியதால் சைக்கிள் மற்றும் டூ வீலரில் சென்ற பலரும் கடும் சிரமத்திற்குள்ளாகினர். தற்போது பெய்த மழையால் மானாவாரியில் சாகுபடி செய்த எள், சோளம், கம்பு உள்ளிட்ட தீவனப்பயிர்கள் செழித்து வளர பேருதவியாக இருக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

The post பரமத்தியில் பரவலாக மழை appeared first on Dinakaran.

Tags : Paramathi ,Athipalayam ,Attipalayam ,K. Paramathi Union ,Dinakaran ,
× RELATED பரமத்தியில் குட்கா விற்றவர் கைது