×
Saravana Stores

தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின்படி ஆந்திராவில் தீபாவளி முதல் ஆண்டுக்கு 3 இலவச காஸ் சிலிண்டர் வினியோகம்: முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

திருமலை: ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் அமராவதியில் உள்ள தலைமைச் செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உடன் துணை முதல்வர் பவன் கல்யாண் உட்பட அமைச்சர்கள் பங்கேற்றனர். இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து உணவுத்துறை அமைச்சர் நாதல்ல மனோகர், செய்தி துறை அமைச்சர் பார்த்தசாரதி, உள்துறை அமைச்சர் அனிதா, சுரங்கத் துறை அமைச்சர் ரவீந்திரா ஆகியோர் இணைந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது: தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தலின்போது கொடுத்த சூப்பர் சிக்ஸ் வாக்குறுதி நிறைவேற்றும் விதமாக தீபாவளி அன்று அக்டோபர் 31ம் தேதி முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆண்டுக்கு 3 காஸ் சிலிண்டர் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். இதற்காக ஆண்டுக்கு ரூ.2684 கோடி அரசு செலவு செய்கிறது. சிலிண்டர் டெலிவரி செய்யப்பட்ட 48 மணி நேரத்தில் நேரடியாக பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு அந்த பணம் செலுத்தப்படும். கர்நாடகா, தமிழ்நாடு, தெலங்கானா, ஒடிசா மாநில எல்லையில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு தொடர் கண்காணிப்பு மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின்படி ஆந்திராவில் தீபாவளி முதல் ஆண்டுக்கு 3 இலவச காஸ் சிலிண்டர் வினியோகம்: முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு appeared first on Dinakaran.

Tags : Diwali ,Andhra ,Chief Minister ,Chandrababu Naidu ,Tirumala ,Andhra Pradesh ,Secretariat ,Amaravati ,Deputy ,Pawan Kalyan ,Dinakaran ,
× RELATED தீபாவளி பண்டிகையை ஒட்டி கூட்ட நெரிசலை...