×
Saravana Stores

சீனாவுடன் ரோந்து ஒப்பந்தம் குறித்து ஒன்றிய அரசு விளக்கம் அளிக்க வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்

புதுடெல்லி: சீனாவுடன் ஏற்பட்ட ஒப்பந்தம் குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார். கடந்த 2020ம் ஆண்டு லடாக்கில் உள்ள கல்வானில் இரு நாட்டு வீரர்களுக்கும் இடையே ஏற்பட்ட வன்முறை மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர்.இதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் ஏற்பட்டது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே, நீண்ட காலத்திற்குப் பிறகு எல்லைப் பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில் ஓர் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.கடந்த திங்கள் கிழமை ராணுவ துருப்புகளின் ரோந்துப்பணி தொடர்பான ஒப்பந்தத்தை இந்தியா அறிவித்தது.

இரு நாடுகளின் எல்லையில் 2020ஆம் ஆண்டுக்கு முன் நிலவிய சூழ்நிலையை இந்த ஒப்பந்தம் மீட்டெடுக்கும் என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார். அதாவது 2020ம் ஆண்டு இந்திய வீரர்கள் எந்த அளவுக்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டார்களோ அதே அளவுக்கு அவர்கள் இப்போது மீண்டும் ரோந்துப் பணியில் ஈடுபட முடியும். இந்த நிலையில்,காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் சமூகவலைதள பக்கத்தில் பதிவிடுகையில்,எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டில் ரோந்து ஏற்பாடுகள் குறித்து சீனாவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என்ற அறிவிப்பு குறித்து பல கேள்விகள் உள்ளன.

இந்த ஒப்பந்தம் மூலம் 2020ல் இந்த பகுதிகளில் எழுந்த பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்பட வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல தசாப்தங்களில் இந்தியாவின் மோசமான வெளியுறவு கொள்கை பிரச்னை ஏற்பட்ட பின்னடைவு கவுரவத்துடன் தீர்க்கப்படும் என நம்புகிறோம். இந்த ஒப்பந்தத்தின் மூலம் 2020 மார்ச்சில் இருந்த பழைய நிலையை மீட்டெடுக்கும் என நம்புகிறோம். நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக எல்லைக்கு வெளியே உள்ள டோம்செக்கில் உள்ள மூன்று ரோந்து புள்ளிகளை நமது துருப்புகள் அடைய முடியுமா?

பாங்காங் சோவில் உள்ள பிங்கர் 8 வரை நம் வீரர்கள் முன்பு சென்று வந்தனர். இப்போது பிங்கர் 3 வரை மட்டும் தான் செல்ல அனுமதிக்கப்படுவார்களா? கோக்ரா-ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதியில் உள்ள 3 புள்ளிகளிலும் இந்திய வீரர்கள் ரோந்து செல்ல அனுமதிக்கப்படுவார்களா? அதே போல் ஹெல்மெட் டாப்,முக்பா ரே உள்ளிட்ட பகுதிகளில் இந்திய மக்கள் கால்நடைகளை மேய்க்க சீன வீரர்கள் அனுமதிப்பார்களா?.இந்த விவகாரம் தொடர்பாக அரசு மக்களிடம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

The post சீனாவுடன் ரோந்து ஒப்பந்தம் குறித்து ஒன்றிய அரசு விளக்கம் அளிக்க வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Union govt ,China ,Congress ,New Delhi ,general secretary ,Jairam Ramesh ,Kalwan ,Ladakh ,Union Government ,Dinakaran ,
× RELATED கூல் லிப்-க்கு கட்டுப்பாடு: ஒன்றிய அரசு பதில்தர ஐகோர்ட் கிளை ஆணை