×
Saravana Stores

ரெயின்போ மருத்துவமனை 10 நாள் சிகிச்சை தர தடை

சென்னை: யூடிபர் இர்ஃபான் விவகாரத்தில் ரெயின்போ மருத்துவமனை 10 நாள் மருத்துவம் செய்ய தடை விதித்து மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கர்ப்பிணிகள் தவிர, மற்ற சிகிச்சைகள் வழங்கக் கூடாது. மருத்துவமனைக்கு 50,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை அரங்கில் இருந்தபோது குழந்தையின் தொப்புள் கொடியை இர்ஃபான் வெட்டுவது போன்று வீடியோ வெளியிட்டிருந்தார். மருத்துவ விதிகளை மீறி யூடியூபில் இர்ஃபான் வீடியோ வெளியிட்டது சர்ச்சையானது. சர்ச்சையானதை தொடர்ந்து யூடியூபில் வெளியிட்ட வீடியோவை இர்ஃபான் நீக்கினார்.

The post ரெயின்போ மருத்துவமனை 10 நாள் சிகிச்சை தர தடை appeared first on Dinakaran.

Tags : Rainbow Hospital ,Chennai ,Irfan ,Dinakaran ,
× RELATED இந்தியாவில் முதன்முறையாக ஒலிம்பிக்...