×
Saravana Stores

ஹேமந்த் சோரனை தோற்கடித்த பாஜக மாஜி எம்எல்ஏ திடீர் ஐக்கியம்: ஜார்கண்ட் தேர்தலில் பரபரப்பு

ராஞ்சி: ஜார்கண்டில் ஹேமந்த் சோரனை தோற்கடித்த பாஜக முன்னாள் எம்எல்ஏ திடீரென ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியில் இணைந்தார். ஜார்கண்ட் சட்டப்பேரவைக்கு வரும் நவம்பர் 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

ஆளும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணி – பாஜக கூட்டணி கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. இந்நிலையில் நேற்று பாஜகவை சேர்ந்த மூன்று முன்னாள் எம்எல்ஏக்களான லூயிஸ் மராண்டி, குணால் சாரங்கி, லக்ஷ்மன் துடு ஆகியோர், திடீரென முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியில் இணைந்தனர்.

முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன் மூன்று முறை பாஜக எம்எல்ஏவாக இருந்த கேதர் ஹஸ்ரா, ஏஜேஎஸ்யூ கட்சித் தலைவர் உமாகாந்த் ரஜக் ஆகியோர் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவில் இணைந்தனர். தற்போது ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவில் சேர்ந்துள்ள முன்னாள் எம்எல்ஏ லூயிஸ் மராண்டி, கடந்த 2014ல் நடந்த தேர்தலின் போது தும்கா தொகுதியில் போட்டியிட்ட ஹேமந்த் சோரனை 5,262 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post ஹேமந்த் சோரனை தோற்கடித்த பாஜக மாஜி எம்எல்ஏ திடீர் ஐக்கியம்: ஜார்கண்ட் தேர்தலில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : BJP Maji MLA ,Hemant Soran ,Jharkhand ,Ranchi ,BJP MLA ,Jharkhand Mukti Morcha ,Jharkhand Mukti ,Dinakaran ,
× RELATED ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தலுக்கான...