×
Saravana Stores

அதிமுக கொள்கை பரப்பு துணைப் பொதுச் செயலாளராக கவுதமி நியமனம்: எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

சென்னை: அதிமுக கொள்கை பரப்பு துணை பொதுச்செயலாளராக கவுதமி நியமனம் செய்யப்பட்டுள்ளார். பாஜவில் இருந்த நடிகை கவுதமி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதனை தொடர்ந்து மக்களவை தேர்தலுக்கு முன்பு கடந்த பிப்ரவரியில் அதிமுகவில் இணைந்தார். இந்நிலையில் அதிமுகவில் நடிகை கவுதமிக்கு கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவி வழங்கி அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்த தடா பெரியசாமிக்கு எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலில் சீட் வழங்காததால் பாஜகவிலிருந்து விலகி தடா பெரியசாமி அதிமுகவில் இணைந்தவர். அதிமுக சிறுபான்மையினர் நல துணைச் செயலாளராக ஃபாத்திமா அலி நியமனம் செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயப் பிரிவுச் செயலாளர் பொறுப்பில் இருந்து சன்னியாசி விடுவிக்கப்பட்டு அதிமுக விவசாய பிரிவு துணைச் செயலாளராக பி.சன்னியாசி நியமனம் செய்யபப்ட்டுள்ளார்.

The post அதிமுக கொள்கை பரப்பு துணைப் பொதுச் செயலாளராக கவுதமி நியமனம்: எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Gautami ,General Secretary ,Edappadi Palanichami ,Chennai ,Deputy Secretary General ,Policy ,Development ,Baja ,Akkatsi ,Lok Sabha ,Atamugh ,Deputy General Secretary ,
× RELATED அதிமுக தற்போது சரியாக இல்லை: முன்னாள் பொதுச்செயலாளர் சசிகலா விமர்சனம்