×
Saravana Stores

தீபாவளி சிறப்பு பஸ்கள் இன்று ஆலோசனை

சென்னை: தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கம் தொடர்பாக அமைச்சர் சிவசங்கர் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தாண்டு தீபாவளி பண்டிகை வரும் அக்.31ம் தேடி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகை இம்முறை வியாழக்கிழமை வருகிறது, தீபாவளிக்கு மறுநாள் வெள்ளிக்கிழமை அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது, இதனால் 4 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கிறது.

மேலும் தீபாவளி பண்டிகையை பலரும் தங்கள் சொந்த ஊர்களில் கொண்டாடவே விரும்புவர். வேலை, கல்லூரி படிப்பு ஆகிய காரணங்களால் நகரங்களில் தங்கியிருப்போர் தீபாவளிக்கு சொந்த ஊர் செல்வது வழக்கம். இந்நிலையில் தீபாவளிக்கு முந்தைய நாட்கள் 29,30 ஆகிய தேதிகளில் பலரும் வெளியூர் பயணங்களுக்கு திட்டமிட்டுள்ளனர். ஆண்டுதோறும் பொதுமக்களின் வசதிக்காக தமிழக அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கும், அந்த வகையில் இந்தாண்டு எத்தனை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.

கடந்த 15ம் தேதி தலைமை செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் போக்குவரத்து துறை உயர் அதிகாரிகள், காவல்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்க திட்டமிட்டிருந்தனர். ஆனால் சென்னையில் பெய்த கனமழை காரணமாக இந்த ஆலோசனை கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

இதையடுத்து, இந்த ஆலோசனை கூட்டத்தை இன்று நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் எத்தனை சிறப்பு பேருந்துகளை இயக்குவது, குறிப்பாக சென்னையில் இருந்து எத்தனை பேருந்துகளை இயக்குவது என்பது குறித்து, போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக எந்தெந்த ஊர்களுக்கு எந்தெந்த பகுதிகளில் இருந்து பேருந்துகளை இயக்கலாம் என்பது குறித்தும், பயணிகளின் பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

The post தீபாவளி சிறப்பு பஸ்கள் இன்று ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Diwali ,Chennai ,Minister ,Sivashankar ,Dinakaran ,
× RELATED தீபாவளிக்கு துவரம் பருப்பு, பாமாயில்...