புகளூர் நகராட்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி நேரில் ஆய்வு

 

வேலாயுதம்பாளையம், அக். 19: புகழூர் நகராட்சி பகுதிகளில் சுமார் 128-க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவி குழுவினர் உள்ளனர். இவர்கள் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கடன் பெற்று சாம்பார் தூள், மஞ்சள்த்தூள், ரசப்பொடி, கறி மசால் பொடி மற்றும் புரோட்டா, சப்பாத்தி, கூந்தல் தைலங்கள், லட்டு ,மைசூர்பாகு உள்ளிட்ட பல்வேறு பல்வேறு பொருட்களை தயாரித்தும் பெட்ஷீட், படுக்கை விரிப்புகள் ,லுங்கிகள், பாவாடைகள், துண்டுகள் உள்ளிட்ட பல்வேறு துணி ரகங்களை விற்பனை செய்கின்றனர்.

இந்நிலையில் புகழூர் நகராட்சி சுற்றுவட்டார பகுதிகளில் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு தனியாக கட்டிடம் இல்லை. இதனால் அந்த கட்டிடத்தை புகழூர் நகராட்சி பகுதியில் கட்டுவதற்கான இடத்தை தேர்வு செய்ய மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் ,மாவட்ட மகளிர் திட்ட இணை இயக்குனர் மஞ்சுளா ஆகியோர் உள்ளூர் நகராட்சியின் எல்லைக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வு நடத்தினார்கள். ஆய்வின் போது புகளூர் தாசில்தார் தனசேகரன், புகழூர் நகராட்சி ஆணையாளர் ஹேமலதா, புகளூர் வருவாய் ஆய்வாளர் சுதா மற்றும் வருவாய்த் துறையினர்,நகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.

The post புகளூர் நகராட்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி நேரில் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: