₹3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது வந்தவாசி அருகே பரபரப்பு பட்டா மாற்றம் செய்ய

வந்தவாசி, அக். 19: வந்தவாசி அருகே பட்டா மாற்றம் செய்ய ₹3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓவை போலீசார் கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மஞ்சம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பு. இவரது மனைவி புஷ்பா(40). இந்த தம்பதிக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். மகள் திருமணம் நடந்து சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். தம்பதி கடந்த 2007ம் ஆண்டு அன்புவின் சகோதரர் வெங்கடேசன் என்பவருக்கு சொந்தமான 87 சென்ட் நிலத்தினை வாங்கியுள்ளனர். தற்போது அந்த விவசாய நிலத்தில் மின் இணைப்பு பெறுவதற்காக பட்டா மாறுதல் கோரி கடந்த 10ம் தேதி சீயமங்கலம் கிராம நிர்வாக அலுவலகத்தில் மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ் மனு அளிக்கப்பட்டுள்ள சர்வே எண்ணில் 4 சென்ட் இடம் கணக்கில் வராமல் உள்ளது. எப்படி சான்றிதழ் வழங்க முடியும் என கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.

இது குறித்து புஷ்பா, ‘தாசில்தாரிடம் மனு அளித்துள்ளேன் மேலும் உரிய ஆவணங்களை கொடுத்துள்ளேன்’ என கூறியுள்ளார். இருந்தபோதிலும் ₹3000 பணம் கொடுத்தால் தான் சான்று வழங்கப்படும் என விஏஓ கூறியதாக கூறப்படுகிறது. இந்த பணத்தினை கொடுக்க விரும்பாத புஷ்பா திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதனை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் டிஎஸ்பி வேல்முருகன் தலைமையிலான போலீசார் நேற்று சீயமங்கலம் கிராம நிர்வாக அலுவலகம் அருகே முகாமிட்டு கண்காணித்து இருந்தனர். அப்போது அங்கு சென்ற புஷ்பா ₹3000 பணத்தினை கிராம நிர்வாக அலுவலரிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. அப்போது அருகில் இருந்த கிராம உதவியாளர் அருள் பணத்தினை பெற்றார். திடீரென போலீசார் வருவதை அறிந்த உதவியாளர் பணத்தை தூக்கி எறிந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு மறைந்திருந்த விஜிலென்ஸ் போலீசார் விஏஓ ரமேைஷ மடக்கிப் பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

The post ₹3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது வந்தவாசி அருகே பரபரப்பு பட்டா மாற்றம் செய்ய appeared first on Dinakaran.

Related Stories: