சீக்கிய பிரிவினைவாத தலைவரை கொல்ல சதி திட்டம் இந்திய உளவுத்துறை அதிகாரி மீது அமெரிக்கா குற்றச்சாட்டு: நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்

வாஷிங்டன்: அமெரிக்கா மற்றும் கனடா குடியுரிமை பெற்ற சீக்கிய பிரிவினைவாத தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னுன். இவரை காலிஸ்தான் தீவிரவாதி என இந்தியா அறிவித்துள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு இவரை கொல்வதற்கு முயற்சி நடந்ததாகவும், இந்த சதி திட்டத்தை முறியடித்தாகவும் அமெரிக்கா அறிவித்தது. மேலும் இந்த சதி திட்டத்தில் இந்திய அதிகாரிக்கு தொடர்பு இருப்பதாகவும் அமெரிக்க குற்றம்சாட்டியிருந்தது. இந்நிலையில் பன்னூன் கொலை முயற்சியில் ஈடுபட்டது இந்திய உளவு துறை(ரா) மாஜி அதிகாரி விகாஸ் யாதவ்(39) என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

18 பக்க குற்றப்பத்திரிக்கையில் யாதவ் ராணுவ உடையில் இருக்கும் புகைப்படம், நியூயார்க்கில் காரில் இரண்டு பேரிடம் டாலரை மாற்றிக்கொள்ளும் புகைப்படமும் இணைக்கப்பட்டுள்ளது. அவரது கூட்டு சதிகாரரான நிகில் குப்தா கடந்த ஆண்டு செக்குடியரசில் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டார். தற்போது அமெரிக்கா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே அமெரிக்க நீதித்துறையின் குற்றப்பத்திரிக்கையில் பெயரிடப்பட்ட நபர் இந்திய அரசின் ஊழியர் இல்லை என்று இந்திய குழு தெரிவித்துள்ளது.

The post சீக்கிய பிரிவினைவாத தலைவரை கொல்ல சதி திட்டம் இந்திய உளவுத்துறை அதிகாரி மீது அமெரிக்கா குற்றச்சாட்டு: நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் appeared first on Dinakaran.

Related Stories: