×
Saravana Stores

செம்மலை, பொன்னையன் போன்றோர் அதிமுகவை ஒருங்கிணைக்க குரல் கொடுக்க வேண்டும்: பெங்களூர் புகழேந்தி பேட்டி

சேலம்: அதிமுகவின் 53ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, அதிமுக ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த பெங்களூர் புகழேந்தி, சேலத்தில் நேற்று எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: எடப்பாடி பழனிசாமி, பிரிந்தவர்கள் யாரையும் கட்சியில் சேர்க்க மாட்டோம். நீக்கியவர்கள் நீக்கியவர்கள் தான் என கூறியுள்ளார். எந்த தியாகத்திற்கும் தயார் என கூறியுள்ளார். அவர் என்ன தியாகம் செய்தார் என தெரியவில்லை. இப்படியே சென்று கொண்டிருந்தால் சேலத்தில் அதிமுக ஒரு சீட் கூட வெற்றி பெற முடியாது. எடப்பாடியில் கூட டெபாசிட் கிடைக்காது.

ஒற்றுமை என்ற வார்த்தைக்கு இடம் தர மறுக்கிறார். மூத்த நிர்வாகிகளான செம்மலை, பொன்னையன் ஆகியோர் வெளியே வந்து இதுபற்றி குரல் கொடுக்கவேண்டும். இப்படியே விட்டால் கட்சி அழிந்துவிடும். எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து வேலுமணி, தங்கமணி, செங்கோட்டையன் உள்பட யாரும் பேசமாட்டார்கள். இவர்கள் யாரையும் நம்பமாட்டேன். சர்வாதிகாரி கையில் அதிமுக சிக்கியுள்ளது. ஒருங்கிணைப்பு குழு ஒன்றை அமைத்தோம். ஆனால் யாரும் வரவில்லை. சசிகலா அதிமுக ஒன்றிணைய பேசுகிறேன் என்கிறார். ஆனால் யாரிடம் பேசுகிறார்? என்ன பேசுகிறார் என்றே தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

* ரூ.1000 கோடி என்ன பண்ணாரு?
புகழேந்தி கூறுகையில், ‘சென்னையில் கடுமையான மழைக்கு அரசு எடுத்த நடவடிக்கையை பாராட்டுகிறேன். துணை முதல்வர் களத்தில் இறங்கிவிட்டார். எடப்பாடி ஆட்சியில் 954 கிலோ மீட்டர் தூரத்தில் ரூ.1000 கோடி செலவு செய்து விட்டோம், இனி தண்ணீர் நிற்காது என்றார். ஆனால் அவர் திமுகவை குற்றம் சொல்கிறார். இது தொடர்பாக கமிஷன் ஒன்றை அமைத்து விசாரணை நடத்தி எடப்பாடி பழனிசாமியை உள்ளே பிடித்து போடவேண்டும்’ என்றார்.

The post செம்மலை, பொன்னையன் போன்றோர் அதிமுகவை ஒருங்கிணைக்க குரல் கொடுக்க வேண்டும்: பெங்களூர் புகழேந்தி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Semmalai ,Ponnaiyan ,AIADMK ,Bangalore ,Pugahendi ,Salem ,Committee ,Bangalore Pugajendi ,MGR ,Jayalalithaa ,Edappadi Palaniswami ,
× RELATED எந்த அடிப்படையில் அப்பாவு மீது அவதூறு...