சுரண்டை அருகே விவசாயிகள் பயன்பாட்டிற்காக கூடுதல் டிரான்ஸ்பார்மர்

 

சுரண்டை, அக்.16:சுரண்டை ஆனைகுளம் ரோட்டில் விவசாய பணிகளுக்கு சீராக மின்விநியோகம் இல்லை என அப்பகுதி விவசாயிகள் பழனி நாடார் எம்எல்ஏ மற்றும் நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அகிலாண்டேஸ்வரி, தென்காசி கோட்ட செயற்பொறியாளர் திருமலைகுமாரசாமி ஆகியோரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த‌ நிலையில் தென்காசி கோட்ட தொழில் வளர்ச்சி திட்டத்தின் கீழ் கிராமப்புறம் சுரண்டை பிரிவு அலுவலகத்துக்கு உட்பட்ட ஆனைகுளம் பகுதிகளில் சீரான மின் விநியோகத்தை உறுதிப்படுத்தும் விதமாக ரூ.4.95 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக 25 கி.வோ. டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது. பணிகள் முடிவுற்றதால் விவசாயிகள் பயன்பாட்டிற்காக புதிய டிரான்ஸ்பார்மரை தென்காசி எம்எல்ஏ பழனி நாடார் இயக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் விநியோகம் தென்காசி திருமலைகுமாரசாமி, உதவி செயற்பொறியாளர் ராஜசேகரன், உதவி மின் பொறியாளர்கள் கானிங், விக்னேஷ், எடிசன், காங்கிரஸ் நிர்வாகிகள் பால் என்ற சண்முகவேல், பிரபாகர், சமுக ஆர்வலர் அழகுராஜ், அரவிந்த், பிரபாகரன் மற்றும் மின் பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post சுரண்டை அருகே விவசாயிகள் பயன்பாட்டிற்காக கூடுதல் டிரான்ஸ்பார்மர் appeared first on Dinakaran.

Related Stories: