கொங்கணாபுரம் சனி சந்தையில் 1.50 கோடிக்கு ஆடுகள் விற்பனை

 

இடைப்பாடி, அக்.13: இடைப்பாடி அருகே கொங்கணாபுரத்தில் சனி சந்தை நேற்று கூடியது. இங்கு சேலம், நாமக்கல், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் 4 ஆயிரம் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். பெங்களூர், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் ஆடுகளை வாங்க குவிந்தனர். தற்போது புரட்டாசி மாதம் நடைபெறுவதால், சந்தையில் விற்பனை மந்தமாக நடந்தது. சந்தையில் 10 கிலோ எடையுள்ள செம்மறி ஆடு ₹4,500 முதல் ₹6,200 வரையும், 20 கிலோ எடையுள்ள செம்மறி ஆடு ₹9,000 முதல் ₹12,500 வரையும், 30 கிலோ எடையுள்ள செம்மறி ஆடு ₹14,500 முதல் ₹18,000 வரையும் விலைபோனது. வளர்ப்பு குட்டி ஆடு ₹2,800 முதல் ₹3,200 வரை விற்பனை ஆனது. நேற்று கூடிய சந்தையில் ஆடுகள் ₹1.50 கோடிக்கு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

The post கொங்கணாபுரம் சனி சந்தையில் 1.50 கோடிக்கு ஆடுகள் விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: