சித்தூர் மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தையில் மானிய விலையில் தக்காளி கிலோ ₹46க்கு விற்பனை

*மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தொடங்கி வைத்தார்

சித்தூர் : சித்தூர் மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தையில் மானிய விலையில் தக்காளி கிலோ ரூ.46க்கு விற்பனையை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தொடங்கி வைத்தார்.

ஆந்திர மாநிலத்தில் சித்தூர் மாவட்டத்தில் அதிகளவில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது கடந்த சில நாட்களாக அதிகளவில் மழை பெய்து வருவதால் தக்காளி சாகுபடி குறைந்துள்ளது. இதனால் தக்காளி கிலோ ரூ.70 முதல் ரூ.80க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதனால் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே மாநில உணவு பாதுகாப்பு துறை ஆணையம் உழவர் சந்தைகளில் மானிய விலையில் தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

அந்த வகையில் சித்தூர் மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தையில் மானிய விலையில் தக்காளி விற்பனையை சித்தூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சங்கர் நேற்று தக்காளி கிலோ ரூ.49 ரூபாய்க்கு விற்பனை தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் பேசியதாவது: மாநில உணவு பாதுகாப்பு துறை ஆணையம் உத்தரவின் பேரில் சித்தூர் மாநகரத்தில் உழவர் சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.49க்கு மானிய விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெளிமார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.70 முதல் ரூ.90 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் சாதாரண ஏழை எளிய மக்கள் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மக்கள் தக்காளியை வாங்க முடியாத அவல நிலை ஏற்பட்டு வந்தது.

இதனை கருத்தில் கொண்டு மாநில உணவு பாதுகாப்பு துறை ஆணையம் நேரடியாக விவசாயிகள் இடம் தரமான தக்காளியை கொள்முதல் செய்து ஒரு கிலோ ரூ.49 விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

நபர் ஒருவருக்கு இரண்டு கிலோ தக்காளி வழங்கப்படும். அதேபோல் உழவர் சந்தையில் துவரம் பருப்பு ஒரு கிலோ ரூ.150 விற்பனை செய்யப்படுகிறது. வெளிமார்க்கெட்டில் ரூ.170 முதல் ரூ.190 வரை துவரம் பருப்பு விற்பனை செய்யப்படுகிறது.

இதே போல் சர்க்கரை ரூ.42க்கும், வேர்க்கடலை ரூ.115க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் சமையலுக்கு பயன்படுத்தப்படும் சூரியகாந்தி சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் ₹129 விற்பனை செய்யப்படுகிறது.

வெளிச்சந்தையில் அதிகரிக்கப்பட்ட சூரியகாந்தி எண்ணெய் ரூ.140 முதல் ரூ.160 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆகவே இந்த அரிய வாய்ப்பை சித்தூர் மாநகர மக்கள் பயன்படுத்திக் கொண்டு உழவர் சந்தையில் பெற்று பயனடைய வேண்டும்.

அதேபோல் ஏழை எளிய மக்கள் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மக்கள் சித்தூர் உழவர் சந்தையில் அரசு சார்பில் விற்பனை செய்யும் தக்காளி, சர்க்கரை, துவரம் பருப்பு, வேர்க்கடலை, பருப்பு மற்றும் பயித்தம் பருப்பு, கல்ல பருப்பு எண்ணெய் உள்ளிட்டவை குறைந்த விலைக்கு வாங்கி பயனடைய வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். இதில் உணவு பாதுகாப்புத் துறை மேலாளர் பாலகிருஷ்ணன், மார்க்கெட் திட்ட அதிகாரி பரமேஸ்வர் உள்பட ஏராளமான அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

விரைவில் வெங்காயம் மானிய விலையில் விற்பனை

ஓரிரு நாட்களுக்குள் மிக விரைவில் வெங்காயம் மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்து சித்தூர் மாநகரத்தில் உழவர் சந்தையில் குறைந்த விலைக்கு வெங்காயம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

தற்போது வெங்காயம் ஒரு கிலோ ரூ.60 முதல் ரூ.80 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மாநில அரசு மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் பகுதியில் நேரடி கொள்முதல் செய்து வாடகை தவிர மிகக் குறைந்த விலைக்கு வெங்காயம் விற்பனை செய்யப்படும் என்று மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சங்கர் தெரிவித்தார்.

The post சித்தூர் மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தையில் மானிய விலையில் தக்காளி கிலோ ₹46க்கு விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: