×

நவராத்திரியை முன்னிட்டு கொலு பொம்மைகள் விற்பனை கண்காட்சி: ஆர்வத்துடன் வாங்கும் மக்கள்

ஸ்ரீவில்லிபுத்தூர்: நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு வில்லிபுத்தூரில் சர்வோதயா கொலு பொம்மைகள் விற்பனை துவங்கி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் சர்வோதயா சங்கத்தின் சார்பில் கொலு பொம்மைகள் விற்பனை கண்காட்சி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு கொலு பொம்மைகள் விற்பனை கண்காட்சி துவங்கி உள்ளது. ஆண்டாள் கோவில் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் துவங்கியுள்ள கண்காட்சியில் ஆயிரக்கணக்கான பொம்மைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.

கடவுள் சிலைகளான சீனிவாச பெருமாள், ஆண்டாள், ரெங்க மன்னார், மதுரை மீனாட்சி, திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் சிலைகள், விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை மற்றும் யானை, புலி, சிங்கம், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள் மற்றும் தேசத்தலைவர்கள் மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, நேதாஜி, எம்ஜிஆர், கலைஞர் போன்ற பெரிய தலைவர்களின் சிலைகளும் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.மேலும் பல வண்ணங்களில் விதவிதமான பொம்மைகள் விற்பனைக்காக கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன.இது குறித்து சர்வோதய சங்க நிர்வாகிகள் கூறும்போது, குறிப்பிட்ட சில ரகங்களுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டு உள்ளது என தெரிவித்தனர். சர்வோதயா சங்க விற்பனை கண்காட்சிக்கான ஏற்பாடுகளை தலைவர் விஜயகுமார், செயலாளர் கோவிந்தராஜ், பொருளாளர் முத்துவேல் ஆகியோர் செய்துள்ளனர்.

The post நவராத்திரியை முன்னிட்டு கொலு பொம்மைகள் விற்பனை கண்காட்சி: ஆர்வத்துடன் வாங்கும் மக்கள் appeared first on Dinakaran.

Tags : Kollu Toys Sale Fair ,Navratri ,Srivilliputhur ,Sarvodaya Kolu ,Villiputhur ,Srivilliputhur Sarvodaya Sangam ,Navratri Kolu Toys Sale Exhibition ,
× RELATED 4 ஆயிரம் பொம்மைகளுடன் நவராத்திரி கொலு கண்காட்சி