×

சென்னையில் 10 விமானங்களின் சேவை ரத்து


சென்னை: போதிய பயணிகள் இல்லாததால் சென்னையில் 10 விமானங்களின் சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. போதிய பயணிகள் இல்லாமல் இலங்கை, பெங்களூர், மும்பை, மதுரை, அந்தமான் உள்ளிட்ட மொத்தம் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து காலை 7.45-க்கு அந்தமான் செல்லும் ஆகாஷா ஏர்லைன்ஸ், 11.20க்கு இலங்கை செல்லும் ஏர் இந்தியா விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பகல் 1.20க்கு, பெங்களூர் செல்லும் ஏர் இந்தியா, 1.40க்கு பெங்களூர் செல்லும் ஆகாஷா ஏர்லைன்ஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. காலை 7-க்கு, பெங்களூரிலிருந்து வரும் ஆகாஷா ஏர்லைன்ஸ், பகல் 12-க்கு, மும்பையில் இருந்து வரும் ஏர் இந்தியா விமானம் ரத்து செய்யபப்ட்டுள்ளது.

The post சென்னையில் 10 விமானங்களின் சேவை ரத்து appeared first on Dinakaran.

Tags : Chennai ,Sri Lanka ,Bangalore ,Mumbai ,Madurai ,Andaman ,Dinakaran ,
× RELATED ரீல்ஸ் எடுக்க முயன்று ரயிலில் இருந்து கீழே விழுந்த இளம்பெண்!