×

போதைப்பொருள் விற்பனை – மேலும் 5 பேர் கைது

சென்னை: விருகம்பாக்கத்தில் போதைப்பொருள் விற்பனை செய்த விவகாரத்தில் மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெங்களூருவைச் சேர்ந்த அருண்குமார், ரிஸ்வான், சாருக், சையது, நிதின் ஆகியோரை போலீசார் கைதுசெய்தனர். கார், செல்போன்கள், மெத்தாம்பெட்டமைன் போதைப்பொருள், ரூ.20,000 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விருகம்பாக்கத்தில் போதைப்பொருள் விற்ற வழக்கில் ஏற்கனவே யோகா மாஸ்டர் ராஜேஷ், வங்கி ஊழியர் சாய் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரும் அளித்த தகவல் அடிப்படையில் பெங்களூருவில் போதைப்பொருள் விற்பனை செய்யும் கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது.

The post போதைப்பொருள் விற்பனை – மேலும் 5 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Virugambakkam ,Arunkumar ,Rishwan ,Charug ,Saidu ,Nitin ,Bangalore ,Virugambakathil ,Dinakaran ,
× RELATED விருகம்பாக்கம் கூவத்தில் தவறி...