×

வேளாண்மை இணை இயக்குநர் தகவல்: பொன்னமராவதியில் பருவமழையை எதிர்கொள்ள தயார்நிலையில் மணல்மூட்டைகள்

பொன்னமராவதி, அக்.4: பொன்னமராவதியில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் மணல் மூட்டைகள் மற்றும் உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள்துறை அமைச்சரின் ஆய்வுக்கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுரையின் படியும் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலாளர் மற்றும் தலைமைபொறியாளர் ஆய்வுக்கூட்டங்களின் போது வழங்கப்பட்ட அறிவுரைகளின் படியும் புதுக்கோட்டை கோட்டம், திருமயம் உட்கோட்டத்தின் மூலம் வடகிழக்கு பருவமழையினை எதிர்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி திருமயம், பொன்னமராவதி, அரிமளம் ஆகியோர் உட்கோட்டப்பகுதிகளில் மணல் மூட்டைகள் மற்றும் உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என திருமயம் உதவி கோட்ட பொறியாளர் இந்துமதி தெரிவித்துள்ளார்.

The post வேளாண்மை இணை இயக்குநர் தகவல்: பொன்னமராவதியில் பருவமழையை எதிர்கொள்ள தயார்நிலையில் மணல்மூட்டைகள் appeared first on Dinakaran.

Tags : Deputy ,Ponnamarawat ,PONNAMARAWATI ,NORTHEAST MONSOON ,Minister of the Ministry of Highways ,Dinakaran ,
× RELATED நம்மாழ்வார் விருது வழங்க நிலத்தில் மண் பரிசோதனை