×
Saravana Stores

மலையை மறைத்த பனிமூட்டம்

ராயக்கோட்டை, அக்.4: ராயக்கோட்டை மற்றும் சுற்றுப்புற பகுதியில் வெயில் கொளுத்தி வந்த நிலையில், கடந்த 2ம் தேதி மாலை சிறிது நேரம் நல்ல மழை பெய்தது. இதனால், வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. இதையடுத்து, நேற்று காலை ராயக்கோட்டை மலை தெரியாத அளவிற்கு பனிமூட்டம் காணப்பட்டது. பனி மூட்டம் ராயக்கோட்டை நகருக்குள் நகர்ந்து வந்த நிலையில் வெயில் அடிக்கவே கலைந்து சென்றது.
பனிமூட்டம் தென்பட்டதால், இனி மழை பெய்ய வாய்ப்பில்லை என விவசாயிகள் தெரிவித்தனர்.

The post மலையை மறைத்த பனிமூட்டம் appeared first on Dinakaran.

Tags : Rayakottai ,Dinakaran ,
× RELATED தக்காளி சாகுபடியில் விவசாயிகள் மும்முரம்